2016-ல் தொடங்கப்பட்ட யுபிஐ, இன்று இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 85% ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வளர்ச்சி இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.
நம்மில் உள்ளோர் தினமும் போன்பே, கூகுள் பே, பேடிஎம், பீம் போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்துகிறோம். டீக்கடையிலிருந்து பெரிய மால்கள் வரை, “ஸ்கேன் பண்ணி பணம் அனுப்புவது” ஒரு வழக்கமான பழக்கமாகிவிட்டது. ஆனால், இந்த அனைத்து ஆப்களும் ஒரே தளத்தில் இயங்குகிறது என்பது பலருக்கு தெரியாது. அந்த தளம் தான் Unified Payments Interface எனப்படும் யுபிஐ.
25
யுபிஐ வசதி
டிஜிட்டல் இந்தியாவின் முக்கிய தூணாக மாறிய யுபிஐ, வெறும் ஒரு டெக்னாலஜி அல்ல; பொதுமக்களுக்கு அதிகாரம் கொடுத்த ஒரு மாற்று கருவி. 2016 ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று உலகின் மிகப்பெரிய ரியல்-டைம் பண பரிவர்த்தனை தளமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் இதன் பங்கு மிகப் பெரியது.
35
போன்பே
தொடக்கத்தில் இருந்த நிலையை பார்த்தால் இந்த வளர்ச்சி இன்னும் ஆச்சரியமாக இருக்கும். அறிமுகமான முதல் மாதத்தில் வெறும் 373 பரிவர்த்தனைகள் மட்டுமே நடந்தன. ஆனால், 2025-26 நிதியாண்டில் இது 24,000 கோடியை கடந்துள்ளது. ஆரம்ப காலத்துடன் ஒப்பிடும்போது 12,000 மடங்கு உயர்வு என்பது யுபிஐ வளர்ச்சியின் அளவைக் காட்டுகிறது.
பண மதிப்பிலும் இதே போன்று மிகப்பெரிய உயர்வு பதிவாகியுள்ளது. 2016-17ல் ரூ.0.07 லட்சம் கோடி மட்டுமே இருந்த பரிவர்த்தனை மதிப்பு, 2025-26ல் ரூ.314 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தினசரி பயன்பாடு வேகமாக அதிகரித்து, தற்போது ஒரு நாளுக்கு சுமார் 66 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் ரூ.0.86 லட்சம் கோடி மதிப்பிலான பணம் இதன் மூலம் பரிமாறப்படுகிறது.
55
டிஜிட்டல் பரிவர்த்தனை
இன்றைக்கு இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 85% யுபிஐ-யே ஆதிக்கம் செலுத்துகிறது. ஆரம்பத்தில் 21 வங்கிகள் மட்டும் இணைந்திருந்த இந்த தளம், தற்போது 700க்கும் மேற்பட்ட வங்கிகளை உள்ளடக்கியுள்ளது. நகரங்கள், கிராமங்களிலும் கூட வங்கிசேவைகளை எளிதாக கிடைக்கச் செய்த இந்த வளர்ச்சி, இந்தியாவின் டிஜிட்டல் முன்னேற்றத்திற்கு பெரிய அடித்தளமாக உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.