இதில், ஆன்லைன் உணவு டெலிவரிதான் வேகமாக வளரும் பிரிவாக உள்ளது. 2020 நிதியாண்டில் ₹270 பில்லியனாக இருந்த இதன் மதிப்பு, 2025-ல் ₹790 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது 2030-க்குள் ₹1.7-2.2 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இது மொத்த உணவுச் சேவையில் 11% மட்டுமே. 2018-ல் இது வெறும் 3% ஆக இருந்தது. எனவே, இந்தத் துறை வளர இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
சென்னை, பெங்களூரு போன்ற மெட்ரோ மற்றும் முதல்நிலை நகரங்கள் சந்தையின் மொத்த மதிப்பில் 75-80% பங்களித்தாலும், கோயம்புத்தூர், மதுரை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களின் பங்கு ஏற்கனவே 20-25% ஐ எட்டியுள்ளது. இது சந்தை பெரிய நகரங்களைத் தாண்டி விரிவடைவதைக் காட்டுகிறது. 2029-க்குள் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 13.7 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
மாதத்திற்கு சராசரியாக 3-5 முறை ஆர்டர்
தற்போது இந்தியர்கள் மாதத்திற்கு சராசரியாக 3-5 முறை ஆர்டர் செய்கிறார்கள். இதுவே அமெரிக்காவில் 8-10 ஆகவும், சீனாவில் 5-10 ஆகவும் உள்ளது. இந்த இடைவெளியை நிரப்புவதன் மூலம் நிறுவனங்கள் வளர முடியும். ஒரு ஆர்டரின் சராசரி மதிப்பும் (AOV) அதிகரித்து வருகிறது. Zomato-வின் சராசரி ஆர்டர் மதிப்பு FY22-ல் ₹282-லிருந்து FY26-ல் ₹461 ஆகவும், Swiggy-க்கு ₹407-லிருந்து ₹463 ஆகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Redseer நிறுவனத்தின் கணிப்புப்படி, 2028-க்குள் இந்தத் துறையின் சராசரி ஆர்டர் மதிப்பு ₹542 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.