நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்

Published : Dec 08, 2025, 02:35 PM IST

இன்டர்நெட் இணைப்பு இல்லாத போதும், USSD சேவையைப் பயன்படுத்தி UPI பேமெண்ட் செய்ய முடியும். நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் எளிதாகப் பணப் பரிவர்த்தனை செய்யலாம். இந்த சேவையை பெறுவது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.

PREV
13
ஸ்மார்ட்போன் இல்லாமல் பேமென்ட்

கையில் பணம் இல்லாமல், ஆன்லைன் பேமெண்ட் செய்ய போனில் நெட்வொர்க் கிடைக்காத சூழலில் சிக்கியுள்ளீர்களா? இனி கவலை வேண்டாம், இதற்கும் தீர்வு உள்ளது. நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் USSD அடிப்படையிலான UPI சேவை மூலம் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்யலாம். இன்டர்நெட் இல்லாமல் எப்படி ஆன்லைன் பேமெண்ட் செய்வது என்பதை விரிவாக காண்போம். இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே USSD சேவையைப் பயன்படுத்தி UPI பேமெண்ட் செய்யலாம். 

இதற்கு உங்கள் மொபைல எண், உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட எண் இல்லாமல் இந்த UPI அம்சத்தைப் பயன்படுத்த முடியாது. உங்கள் மொபைல் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், UPI பின்னை அமைக்க வேண்டும். ஏற்கனவே ஆன்லைன் UPI பின் இருந்தால், மீண்டும் அமைக்க தேவையில்லை.

23
நெட்வொர்க் இல்லமல் பணம் அனுப்பும் முறை

மொபைலில் இருந்து ஒரு குறியீட்டை டயல் செய்வதன் மூலம் USSD முறையில் பணம் அனுப்பலாம். நெட்வொர்க் இல்லாதபோது, மொபைல் டேட்டா இல்லாதபோது, அல்லது ஸ்மார்ட்போன் இல்லாதபோது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். NPCI இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை எப்படி அமைப்பது மற்றும் பயன்படுத்துவது என்பதை விரிவாகப் பார்ப்போம். 

வங்கி கணக்கில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99# டயல் செய்து ஆஃப்லைன் UPI பேமெண்ட்டை தொடங்கலாம். இது 83 வங்கிகள் மற்றும் 4 டெலிகாம் நிறுவனங்கள் மூலம் கிடைக்கிறது. இந்த சேவை 13 மொழிகளில் உள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.5,000 வரம்பு மற்றும் ரூ.0.50 சேவைக் கட்டணம் உண்டு.

33
ஆஃப்லைன் யுபிஐ பேமெண்ட்

ஆஃப்லைன் UPI பேமெண்ட் செய்ய, முதலில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இந்த அம்சத்தை செயல்படுத்த வேண்டும். *99# டயல் செய்யவும். விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் வங்கியின் IFSC குறியீட்டை உள்ளிடவும். இணைக்க விரும்பும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். டெபிட் கார்டின் கடைசி 6 இலக்கங்கள் மற்றும் காலாவதி தேதியை உள்ளிடவும். 

விவரங்களைச் சரிபார்த்த பிறகு, ஆஃப்லைன் UPI அம்சம் செயல்படுத்தப்படும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99# டயல் செய்யவும். பணம் அனுப்ப 1-ஐ அழுத்தவும். பெறுநரின் UPI ஐடி, மொபைல் எண் அல்லது வங்கி கணக்கு விவரங்களை உள்ளிடவும். சரியான தொகையை (அதிகபட்சம் ரூ.5000) டைப் செய்து, UPI பின்னை உள்ளிட்டு பரிவர்த்தனையை முடிக்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories