இனி இந்த 5 விஷயங்களுக்கு ஆதார் செல்லாது.. UIDAI அதிரடி உத்தரவு.. கையில் இதை வச்சுக்கோங்க!

Published : Apr 28, 2026, 07:13 PM IST

Aadhaar Card Update: இனிமேல் ஒரு முக்கியமான 5 விஷயங்களுக்கு ஆதார் கார்டு செல்லாது என்று UIDAI அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
13
இனி இந்த விஷயங்களுக்கு ஆதார் செல்லாது

இந்தியாவில் ஆதார் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாகும். வங்கிக் கணக்கு தொடங்குவதில் இருந்து மொபைல் சிம் கார்டு வாங்குவது வரை எல்லாத்துக்கும் ஆதார் தேவை. இதுமட்டுமின்றி ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவது என அனைத்துக்கும் ஆதார் அவசியமாகிறது. ஆனால், இனிமேல் பிறந்த தேதிக்கான ஆதாரமாக (Date of Birth) இதை பயன்படுத்த முடியாது என UIDAI அதிரடியாக தெரிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு பற்றி விரிவாக பார்க்கலாம்.

அதாவது ஆதார் கார்டு எடுக்கும்போது, பலர் பிறந்த வருடத்தை மட்டுமே குறிப்பிடுகின்றனர். அப்படி செய்யும்போது, சிஸ்டம் தானாகவே அந்த வருடத்தின் ஜனவரி 1-ஆம் தேதியை பிறந்த தேதியாக எடுத்துக்கொள்கிறது. இந்த தகவல் பல சமயங்களில் தோராயமானது என்பதால், இதை 100% துல்லியமானது என கருத முடியாது. இதனால்தான், சரியான வயது அவசியமான அரசுப் பணிகள், பென்ஷன் போன்ற இடங்களில் இனி ஆதார் கார்டை ஏற்க மாட்டார்கள்.

23
அந்த 5 விஷயங்கள் என்னென்ன?

இந்த மாற்றத்தால் எங்கெல்லாம் பாதிப்பு ஏற்படும் என்று பாருங்கள்: 1. வயதை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் பென்ஷன் மற்றும் அரசு திட்டங்களுக்கு ஆதார் மட்டுமே இனிமேல் ஆதாரமாக போதாது. 2. புதிய வேலைக்கு சேரும்போது பிறந்த தேதியை சரிபார்க்க ஆதார் மட்டுமே போதாது. 3. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது, இனி பள்ளி சான்றிதழ் அல்லது பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் கொடுக்க வேண்டும். 4. இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியத்தை கணக்கிடவும் ஆதார் மட்டுமே போதாது. 5. நீதிமன்றம், உயில் போன்ற சட்டரீதியான ஆவணங்கள் தொடர்பான பணிகளிலும் ஆதார் மட்டுமே போதாது.

33
ஆதாருக்கு பதில் என்ன ஆதாரங்கள் தேவை?

மேற்கண்ட இந்த 5 விஷயங்களுக்கு ஆதார் மட்டுமே செல்லாது என்றால் வேறு எதை ஆதாரமாக கொடுப்பது? என நீங்கள் கேட்கலாம். இனி பிறந்த தேதிக்கான ஆதாரமாக கீழ்க்கண்ட இந்த ஆவணங்களை நீங்கள் பயன்படுத்தலாம்: 1. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificaடெ) 2. உயர்நிலைப் பள்ளி மதிப்பெண் பட்டியல் அல்லது சான்றிதழ் 

3. பாஸ்போர்ட் 4. பான் கார்டு நீங்கள் எங்காவது விண்ணப்பப் படிவம் நிரப்பும்போது, உங்கள் புகைப்படம் மற்றும் முகவரி அடையாளத்திற்கு மட்டும் ஆதாரை பயன்படுத்துங்கள். பிறந்த தேதி (DOB) கேட்கும் இடத்தில், உங்கள் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது பிறப்புச் சான்றிதழை கையில் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் வேலை ஒரே முறையில் முடியும், தேவையில்லாமல் அலைய வேண்டியிருக்காது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories