Aadhaar Users Alert: இன்று முதல் இந்த ஆப் செயல்படாது.. ஆதார் பயனர்களுக்கு மத்திய அரசின் முக்கிய எச்சரிக்கை

Published : Jun 30, 2026, 08:05 AM IST

Aadhaar Users Alert: ஆதார் பயனர்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஆகும்.

PREV
15
ஆதார் சேவையில் பெரிய மாற்றம்

ஆதார் சேவைகள் தொடர்பான மொபைல் வழியாக வந்த கோடிக்கணக்கான பயனர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த எம் ஆதார் செயலி இன்று முதல் செயல்படாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் பழைய செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், அதற்கு மாற்றாக புதிய ஆதார் செயலியை உடனடியாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

25
புதிய செயலிக்கு வரவேற்பு

இந்த மாற்றம் வெறும் செயலி மாற்றம் மட்டுமல்ல. பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கிலும் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய செயலியில் ஆதார் அட்டையின் நகல் வழங்க வேண்டிய அவசியம் குறைக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் செயலியில் உள்ள விரைவு குறியீட்டை பயன்படுத்தி அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும். இதனால் தனிப்பட்ட தகவல்கள் தேவையில்லாமல் பகிரப்படும் அபாயமும் குறையும்.

35
புதிய ஆதார் ஆப்

மேலும், புதிய ஆதார் செயலியில் முக அங்கீகார வசதி, பயோமெட்ரிக் பூட்டை இயக்கும் மற்றும் நிறுத்தும் வசதி, தேவையான தகவல்களை மட்டும் பகிரும் தனியுரிமை அம்சம் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பெயர் மற்றும் வயது போன்ற விவரங்கள் மட்டுமே தேவைப்படும் இடங்களில் முழு ஆதார் எண்ணை பகிர வேண்டிய அவசியமில்லை. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை எளிதாக புதுப்பிக்க முடியும்.

45
ஆதார் அப்டேட்

புதிய ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்வது மிகவும் எளிது. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் “ஆதார் செயலி” என்று தேடி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செயலியை மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். ஒரு முறை கடவுச்சொல் மற்றும் முக அங்கீகாரத்தை நிறைவு செய்தவுடன் அனைத்து சேவைகளையும் பயன்படுத்தலாம்.

55
எம் ஆதார் செயலி சேவை நிறுத்தம்

மொத்தத்தில், எம் ஆதார் செயலி சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பழைய செயலியை பயன்படுத்தி வந்தவர்கள் தாமதிக்காமல் புதிய ஆதார் செயலிக்கு மாறுவது நல்லது. பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் எளிய பயன்பாடு ஆகிய மூன்றையும் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது, இனி ஆதார் சேவைகளை மேலும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயன்படுத்த உதவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories