ப்ளூ ஸ்டார், கோத்ரேஜ் அப்ளையன்சஸ், ஹையர், டைகின், சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. ஹிட்டாச்சி பிராண்ட் ஏசிகளை விற்கும் எல்.ஜி மற்றும் போஷ் ஹோம் கம்ஃபர்ட் நிறுவனங்களும் ஏசி விலையை சுமார் 5 சதவீதம் உயர்த்தியுள்ளன. பானாசோனிக் நிறுவனம் தற்போதைய விலை உயர்வு குறித்து இன்னும் ஆலோசித்து வருகிறது.
இது குறித்து ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் எம்.டி பி. தியாகராஜன் பேசுகையில், 'மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால், ஏசி மற்றும் டீப் ஃப்ரீசர்களின் விலையை ஏற்கனவே 5 முதல் 8 சதவீதம் வரை உயர்த்திவிட்டோம். தாமிரம், இரும்பு, பிளாஸ்டிக் விலை ஏறியதால், இந்த வருஷம் மட்டும் இதுவரை 3 விலையை உயர்த்தி இருக்கிறோம்'' என்றார்.
கோத்ரேஜ் எண்டர்பிரைசஸ் குரூப் பிசினஸ் ஹெட் கமல் நந்தி கூறுகையில், ''மூலப்பொருட்களின் விலை 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் பல பொருட்களின் விலையை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று. இருந்தாலும், பழைய விலையில வாங்குன ஸ்டாக் இன்னும் ஒன்றரை மாசத்துக்கு மார்க்கெட்டில் கிடைக்கும்'' என்று தெரிவித்தார். பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் டிவி, ஏசி, பிரிட்ஜ் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.