நீண்டகால வைப்புத்தொகைக்கு (FD)க்கு வங்கிகள், அஞ்சல் துறை மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் அடிப்படையில் சலுகைகளையும், வட்டிவிகிதங்களையும் வழங்குகிறது.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை நிலையான வைப்புத்தொகையில் FD-யில் முதலீடு செய்யும் போது, டெபாசிட் செய்யப்பட்ட வைப்புத் தொகையானது 7 நாட்கள் முதல் அடுத்த 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு அதனை உங்களால் சொந்தம் கொண்டாட முடியாது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை பொருத்து உங்களுக்கு மாத வட்டிவீதம் மாறுபடும.