இந்தக் காலக்கெடு அனைத்து வரி செலுத்துவோருக்கும் பொதுவானது அல்ல. வருமான வரிச் சட்டம் பிரிவு 92E-ன் கீழ் பட்டயக் கணக்காளரின் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பரிவர்த்தனைகள்: 2025–26 நிதியாண்டில் குறிப்பிட்ட சர்வதேசப் பரிவர்த்தனைகள் அல்லது உள்நாட்டுப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு, அதற்காகக் கணக்காளர் அறிக்கையைப் பெற வேண்டியவர்கள் இதில் அடங்குவர். உதாரணமாக, இந்திய நிறுவனம் ஒன்று வெளிநாட்டில் உள்ள தனது துணை நிறுவனத்துடன் வணிகப் பரிவர்த்தனை செய்தால், அதன் தன்மைக்கு ஏற்ப இந்த விதிகள் பொருந்தும்.
பங்குதாரர்கள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்கள்: பிரிவு 92E-ன் கீழ் வரும் நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கும் இந்தக் காலக்கெடு பொருந்தும். அத்துடன், வருமான வரிச் சட்டம் பிரிவு 5A பொருந்தும் பட்சத்தில், அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களும் இதே காலக்கெடுவைப் பின்பற்ற வேண்டும்.
இது குறித்து நவ்ராஜ் குளோபல் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் பட்டயக் கணக்காளர் நிஷாந்த் சங்கர் கூறுகையில், "2026–27 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிச் சட்டம் பிரிவு 139(1)-ன் கீழ், பரிமாற்ற விலை நிர்ணய விதிகளுக்கு உட்பட்ட குறிப்பிட்ட வரி செலுத்துவோர் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30, 2026 கடைசி தேதியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாலேயே ஒருவருக்கு நவம்பர் 30 காலக்கெடு தானாகப் பொருந்திவிடாது. அந்த நிறுவனம் குறிப்பிட்ட அறிக்கை விதிகளுக்கு உட்பட்டதாகவும், சட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதாகவும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.