PhonePe, GPay, Paytm... மக்கள் அதிகம் யூஸ் பண்ற யுபிஐ ஆப் எது தெரியுமா?

Published : Oct 18, 2026, 08:45 AM IST

UPI Payment Apps : இப்போதெல்லாம் எல்லாமே டிஜிட்டல் பேமெண்ட் தான். கையில் காசு வெச்சுக்கிற பழக்கமே குறைஞ்சிடுச்சு. ஃபோன்பே, ஜிபே, பேடிஎம் ஆகிய மூன்று ஆப்கள் தான் பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள்.

PREV
15
UPI பேமெண்ட்ல எந்த ஆப் முன்னணியில இருக்கு?

இப்போதெல்லாம் கடைக்கு போனா யாரும் கையில காசு கொடுக்கிறதே இல்லை. ரோட்டுக்கடையில ஒரு வாழைப்பழம் வாங்குறதுல இருந்து, கார் வாங்குறது வரைக்கும் எல்லாமே மொபைல் பேமெண்ட் தான். முன்னாடி எல்லாம் மார்க்கெட் போனா பர்ஸ் நிறைய பணம் கொண்டு போவாங்க. ஆனா இப்போ எல்லார் பாக்கெட்டும் காலியா தான் இருக்கு. பிச்சைக்காரங்க 10 ரூபாய் கேட்டா கூட கொடுக்க கையில சில்லறை இருக்கிறதில்லை.

25
எந்த ஆப்பை மக்கள் அதிகமா யூஸ் பண்றாங்க?

காய்கறி வாங்குறது, ஷாப்பிங் பண்றது, கரண்ட் பில் கட்டுறதுனு எல்லாத்துக்கும் மக்கள் UPI தான் யூஸ் பண்றாங்க. இதுக்கு ஃபோன்பே, கூகுள் பே, பேடிஎம் மாதிரியான ஆப்கள் ரொம்பவே பாப்புலரா இருக்கு. ஆனா, இந்த மூணுல மக்கள் எதை அதிகமா யூஸ் பண்றாங்க? எந்த ஆப்புக்கு மார்க்கெட்ல அதிக டிமாண்ட் இருக்கு? இத பத்தின சுவாரஸ்யமான தகவல் இப்போ வெளியாகியிருக்கு.

சமீபத்திய டேட்டா படி, மக்கள் அதிகமா யூஸ் பண்றது ஃபோன்பே தான். ரெண்டாவது இடத்துல கூகுள் பே இருக்கு. மூணாவது இடத்துல தான் பேடிஎம் இருக்கு. அதாவது UPI மார்க்கெட்ல ஃபோன்பே தான் பெரிய ஷேர் வெச்சிருக்கு. ஃபோன்பே மற்றும் கூகுள் பே ரெண்டோட மொத்த மார்க்கெட் ஷேர் மட்டுமே சுமார் 77.9% வருது. மத்த ஆப்கள் எல்லாம் இதைவிட ரொம்ப கம்மியான ஷேர் தான் வெச்சிருக்கு.

35
யுபிஐ ஆப்களின் மார்க்கெட் ஷேர் நிலவரம்

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் ஃபோன்பே நிறுவனம் 45.6% சந்தைப் பங்குடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக கூகுள் பே 32.3% சந்தைப் பங்குடன் இரண்டாவது இடத்திலும், பேடிஎம் 8% சந்தைப் பங்குடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. நவி செயலி 4.4% சந்தைப் பங்குடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சூப்பர் மணி 1.7% சந்தைப் பங்கையும், BHIM செயலி 1% சந்தைப் பங்கையும் கொண்டுள்ளன. மேலும், Fam ஆப் 0.9%, வாட்ஸ் அப் பே 0.7% சந்தைப் பங்குடன் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் கிரெட் மற்றும் ஆக்சிஸ் பேங்க் ஆப் ஆகிய இரண்டு செயலிகளும் தலா 0.6% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சந்தையில் ஃபோன்பே மற்றும் கூகுள் பே ஆகிய இரண்டு நிறுவனங்களும் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

45
மூணாவது இடத்துக்கு தள்ளப்பட்ட பேடிஎம்

இந்த UPI பேமெண்ட் ஆப்கள் லிஸ்ட்ல பேடிஎம் மூணாவது இடத்துல இருக்கு. இதோட மார்க்கெட் ஷேர் வெறும் 8% தான். ஆனா ஃபோன்பே, கூகுள் பே ரெண்டும் ரொம்பவே முன்னணியில இருக்கு. இந்த ரெண்டு ஆப்களோட மொத்த மார்க்கெட் ஷேர் மட்டுமே சுமார் 77.9% வருது. UPI மார்க்கெட்ல இந்த ரெண்டு கம்பெனிகளும் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்குனு இந்த டேட்டா மூலமா நாம தெரிஞ்சுக்கலாம்.

55
UPI பேமெண்ட்ல புது MDR ரூல்ஸ் என்ன?

UPI பரிவர்த்தனைகளுக்கு மெர்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் (MDR) கொண்டு வர்ற திட்டம் இப்போ நியூஸ்ல இருக்கு. அக்டோபர் 15-ல இருந்து UPI MDR-ஐ அமல்படுத்த முடிவு செஞ்சிருந்தாங்க. ஆனா, NPCI (நேஷனல் பேமண்ட்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா) இந்த திட்டத்தை தீபாவளிக்கு அப்புறம் தள்ளி வெச்சிருக்கு. புது தேதியை சீக்கிரமே அறிவிப்பாங்க. செப்டம்பர் 15-ம் தேதி NPCI வெளியிட்ட அறிவிப்புப்படி, ரூ.2,000-க்கு மேல நடக்குற குறிப்பிட்ட UPI வியாபார பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமா ரூ.300 வரைக்கும் கட்டணம் இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories