எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளின் விலை ஏன் உயரும்?
நான்காவது காலாண்டில் எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு க்ராஸ் ரிஃபைனிங் மார்ஜின், மார்க்கெட்டிங் மார்ஜின் மற்றும் தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போன்றவை எதிர்மறையான காரணிகளாக இருந்தாலும், இவற்றை இன்வென்டரி லாபம் மற்றும் LPG இழப்பீடு மூலம் ஈடுகட்ட முடியும் என்பது நல்ல விஷயம் என்று புரோக்கரேஜ் நிறுவனமான சிட்டி தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இந்தத் துறையின் பங்குகள் 5-10% சரிவை சந்தித்துள்ளன. எனவே இது வாங்குவதற்கு நல்ல வாய்ப்பாகும்.
Indian Oil Share price Target: புரோக்கரேஜ் நிறுவனமான சிட்டி இண்டியன் ஆயில் பங்குகளை வாங்க பரிந்துரைத்துள்ளது. இதன் இலக்கு விலை (Indian Oil Share Price Target) ரூ.190 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பங்கு ரூ.131ல் முடிவடைந்தது மற்றும் புதன்கிழமை, ஜனவரி 22 அன்று ரூ.129 அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது. இதன்படி, முதலீட்டாளர்களுக்கு சுமார் 45% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தப் பங்கின் 52 வார உச்சம் ரூ.197 மற்றும் 52 வார குறைந்தபட்சம் ரூ.121 ஆகும்.