மியூச்சுவல் ஃபண்டில் ஒரே ஆண்டில் 70% க்கு மேல் லாபம் கொடுக்கும் பங்குகள்!

First Published | Sep 28, 2024, 12:45 PM IST

இந்திய பங்குச் சந்தைகளின் இந்த வளர்ச்சி காரணமாக கடந்த ஓராண்டில், 50%க்கும் அதிகமான பங்குகள் உயர்ந்துள்ள நிலையில், ஒரு வருடத்தில் அதிக வருமானம் தரும் ஐந்து சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளைப் இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Mutual funds investment

மியூச்சுவல் ஃபண்ட் கடந்த 5 ஆண்டுகளில் ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2019 இல் சுமார் ரூ.25 லட்சம் கோடியிலிருந்து 2024-ல் சுமார் 67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகளின் இந்த வளர்ச்சி காரணமாக கடந்த ஓராண்டில், 50%க்கும் அதிகமான பங்குகள் உயர்ந்துள்ளன. ஒரு வருடத்தில் அதிக வருமானம் தரும் ஐந்து சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளைப் இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Invesco India Focused Fund – Regular Plan

இன்வெஸ்கோ இந்தியா ஃபோகஸ்டு ஃபண்ட் ரெகுலர் திட்டம் 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு முன் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.1,74,158 ஆக வளர்ந்திருக்கும்.

இதில் 1 வருடத்தில் கிடைக்கும் வருவாய் 74.16%. குறைந்தபட்ச முதலீடு ரூ 1000. மொத்த நிதி அளவு: ரூ 3080 கோடி. செலவு விகிதம்: 1.92%. NAV: ரூ 29.40

Latest Videos


Motilal Oswal Midcap Fund – Regular Plan

மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் நிதி - ரெகுலர் திட்டம் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் ஒரு வருடத்துக்கு முன் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், ரூ.1,72,975 ஆக வளர்ந்திருக்கும். ஓர் ஆண்டில் கிடைக்கும் வருவாய் 72.97%.

குறைந்தபட்ச முதலீடு ரூ 500. மொத்த நிதி அளவு ரூ 15,940 கோடி. செலவு விகிதம் 1.65%. NAV ரூ 108.02.

LIC MF Infrastructure Fund

எல்ஐசி எம்.எஃப். உள்கட்டமைப்பு நிதி 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000. ஒரு வருடத்தில் கிடைகுகம் வருவாய் 72.22%. ஓராண்டுக்கு முன் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், ரூ.1,72,217 ஆக உயர்ந்திருக்கும்.

மொத்த நிதி அளவு: ரூ 725 கோடி. செலவு விகிதம் 2.40%. NAV ரூ 51.17

Motilal Oswal ELSS Tax Saver Fund – Regular Plan

மோதிலால் ஓஸ்வால் ELSS வரி சேமிப்பு நிதி - ரெகுலர் திட்டம் 2015ஆம் ஆண்டில் அறிமுகமானது. ஓராண்டில் 71.46% வருவாய் கொடுக்கும் இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ 500. இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.1,65,087 ஆக வளர்ந்திருக்கும்.

மொத்த நிதி அளவு ரூ. 3,984 கோடி. செலவு விகிதம் 1.83%. NAV ரூ 55.95.

ICICI Prudential Nifty Next 50 Index Fund

ஐசிஐசிஐ புருடென்ஷியல் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் ஃபண்டில் குறைந்தபட்ச முதலீடு ரூ 100. ஒரு வருடத்தில் 69.24% வருவாய் தருகிறது. 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.1,57,489 ஆக வளர்ந்திருக்கும்.

மொத்த நிதி அளவு ரூ.6,863 கோடி. செலவு விகிதம் 0.66%. NAV ரூ 67.48

click me!