தமிழகத்தில் கடந்த சில வாரமாகவே காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இவற்றின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tomato
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தக்காளியின் விலை கிலோவுக்கு 100க்கு மேல் விற்கப்படுகிறது. தக்காளி விலை எப்போதும் குறையும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்து வந்த நிலையில் வெங்காயம் மற்றும் காய்கறி விலைகளும் அடுத்தடுத்து உயர்ந்தது.
அதேபோல், கடந்த சில நாட்களாக இஞ்சி விளைச்சல் உள்ள பகுதிகளில் கனமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இஞ்சி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
Chillies
இந்நிலையில், பச்சை மிளகாய் விலையும் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து பச்சை மிளகாய் விற்பனைக்கு வருகிறது. தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் சீசன் முடிந்துவிட்டது. கர்நாடக மாநிலம் ஹாசனில் மட்டுமே தற்போது பச்சை மிளகாய் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இதனால் பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக கடந்த சில நாட்களாக பச்சை மிளகாய் விலை அதிகரித்துள்ளதுது. கடந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் தற்போது 4 மடங்கு வரை விலை உயர்ந்து ரூ.400-க்கு விற்கப்படுகிறது.