Onion Tomato Price: எகிறும் தக்காளி, வெங்காயம் விலை.! என்ன காரணம்? இன்றைய சென்னை கோயம்பேடு மார்க்கெட் நிலவரம் இதோ!

Published : Jul 11, 2026, 07:41 AM IST

Vegetable Price: தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஜூலை 11ம் தேதியன்று காய்கறிகளின் விலை பட்டியல் விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

PREV
15

சமையலுக்கு தக்காளி மற்றும் வெங்காயம் முக்கிய தேவையாக உள்ளது. இந்த இரண்டும் இல்லாமல் உணவு சமைப்பது என்பது சவலான விஷயமாகும். அந்தளவிற்கு சமையலோடு இணைந்து இருப்பது தக்காளியும் வெங்காயமும் தான். குறிப்பாக பொறியல், ரசம் வைப்பது முதல் பிரியாணி சமைப்பது வரை இவற்றின் தேவை அதிகம் உள்ளது. ஆகையால் காய்கறிகளை கம்மியாக வாங்கி சென்றாலும் தக்காளி மற்றும் வெங்காயத்தை இல்லத்தரசிகள் பை நிறைய வாங்கி செல்கின்றனர்.

25

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக அடுத்த சில நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

35

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஜூலை 11ம் தேதியான சனிக்கிழமை காய்கறிகள் மற்றும் வெங்காயம் தக்காளி விலையை என்ன என்பதை பார்க்கலாம். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 37 முதல் 47 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 61 முதல் 77 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 31 முதல் 39 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 72 முதல் 90 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 47 முதல் 59 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 முதல் 38 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 54 முதல் 68 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 முதல் 63 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 முதல் 44 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

45

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 54 முதல் 68 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 முதல் 63 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 38 முதல் 48 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 66 முதல் 83 ரூபாய்க்கும், காலிபிளவர் 41 முதல் 54 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 31 முதல் 39 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 72 முதல் 90 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 44 முதல் 56 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

55

பீன்ஸ் ஒரு கிலோ 94 முதல் 117 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 97 முதல் 122 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 49 முதல் 62 ரூபாய்க்கும், மாங்காய் 20 முதல் 26 ரூபாய்க்கும், பூசணி ஒரு 24 முதல் 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 46 முதல் 57 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 49 முதல் 62 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 49 முதல் 62 ரூபாய்க்கும், கோவைக்காய் 48 முதல் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories