கார்ல பெங்களூரு போறீங்களா.? இனி ரூ.7,680 மிச்சம்..! திருச்சி போறீங்களா.? அப்போ ரூ.8,880 சேமிக்கலாம்..!

Published : Jul 22, 2025, 04:05 PM IST

மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, தனியார் கார், ஜீப், வேன் உரிமையாளர்கள் வருடாந்திர பயண அட்டை மூலம் ஆயிரக்கணக்கான ரூபாயைச் சேமிக்கலாம். இந்த அட்டை தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிப்பவர்களுக்குக் கட்டணச் சலுகைகளை வழங்குகிறது.

PREV
15
இனி அடிக்கடி ஊருக்கு போக ரீசன் கிடைச்சாச்சு!

மத்திய அரசின்  புதிய அறிவிப்பால் வாகன ஓட்டிகள் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் சேமிக்க முடியும். இதனால் கார் வைத்துள்ளோர் கவலை இல்லாமல் அடிக்கடி ஊருக்கு சென்று வரலாம். இனி போக்குவரத்து செலவு கட்டுக்குள் வரும் என்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். அப்பாடா இனி நினைத்த போதெல்லாம் ஊருக்கு போவலாம் என்பதே பலரின் மைண்ட் வாய்சாக  உள்ளது.

25
அப்பாடா! இவ்ளோ குறையுமா?

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், தனியார் கார், ஜீப், மற்றும் வேன் உரிமையாளர்களுக்கு வருடாந்திர பயண அட்டை வசதியை 2025 ஆகஸ்ட் 15 முதல் அறிமுகப்படுத்துகிறது. இந்த அட்டை தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு குறிப்பிடத்தக்க செலவு சேமிப்பை வழங்கும். 3,000 ரூபாய் செலுத்தி பெறப்படும் இந்த அட்டை, ஒரு வருடத்திற்கு அல்லது 200 முறை கட்டணமின்றி தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவுச் சாலை கட்டண மையங்களை கடக்க அனுமதிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் சேமிக்க முடியும்.

35
கிடைக்கும் பணத்தில் பெட்ரோல் போட்டுக்கலாம்!

எடுத்துக்காட்டாக, சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஒரு முறை பயணிக்க 445 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். மாதத்திற்கு இரு முறை இப்பயணத்தை மேற்கொண்டால், ஆண்டுக்கு 10,680 ரூபாய் செலவாகும். ஆனால், வருடாந்திர பயண அட்டை மூலம், 3,000 ரூபாய் செலுத்தினால், 7,680 ரூபாய் சேமிக்க முடியும். மேலும், இந்த அட்டை 56 கூடுதல் முறை கட்டண மையங்களை கடக்க உதவும். இதேபோல், சென்னை-திருச்சி வழித்தடத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் ஆண்டுக்கு 8,880 ரூபாய் வரை சேமிக்க முடியும், மேலும் 7 கட்டண மையங்களை 168 முறை கடக்க முடியும்.

45
பயணிகள் கவனித்து செயல்படுத்தவும்!

இந்த அட்டையை ராஜ்மார்க் யாத்ரா செயலி அல்லது என்.எச்.ஏ.ஐ. இணையதளம் மூலம் மட்டுமே பெற முடியும். வாகனத்தின் ஃபாஸ்ட்டாக் தகுதி சரிபார்க்கப்பட்ட பின் இந்த அட்டை செயல்படுத்தப்படும். வாஹன் தரவு தளத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டு, வணிகம் அல்லாத தனியார் வாகனங்களுக்கு மட்டுமே இந்த அட்டை பொருந்தும். வணிக வாகனங்களில் பயன்படுத்தினால், அட்டை உடனடியாக செயலிழந்துவிடும்.

55
லாபத்துக்கு மேல் லாபம்! இனிமே ஜாலிதான்!

இந்தத் திட்டம், அடிக்கடி பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு பொருளாதார நன்மையை வழங்குவதோடு, கட்டண மையங்களில் நேரத்தையும் மிச்சப்படுத்தும். உதாரணமாக, சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் மாதம் இரு முறை பயணிக்கும் ஒருவர், 10,680 ரூபாய் செலவை 3,000 ரூபாயாகக் குறைத்து, 72% செலவு சேமிப்பை அடைய முடியும். இதேபோல், சென்னை-திருச் நன்மைகளை வழங்குவதோடு, பயண அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக இந்த வருடாந்திர பயண அட்டை அமையும்.

Read more Photos on
click me!

Recommended Stories