இந்தியாவில் தங்கத்தின் விலையானது மனித உடலில் ஏற்படும் பிரஷர் நோய்க்கு இணையானது. இரண்டுமே எப்பொழுது ஏறும், எப்பொழுது இறங்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. இவை அதிகமாக உயர்ந்தாலும் புதிதாக வாங்க நினைப்பவர்களுக்கு சிக்கல் தான், அதே போன்று அதிகமாக இறங்கினாலும், ஏற்கனவே வாங்கி வைத்திருப்பவர்களுக்கு சிக்கல் தான். அந்த வகையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.