தமிழகத்தில் கடந்த சில வாரமாகவே காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இவற்றின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தினக்கூலிக்கு செல்லும் பொதுமக்கள் காய்கறி மற்றும் அரிசி வாங்குதற்கே சம்பளம் சரியாக இருப்பதாக புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி விலை அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மற்றும் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து விலை குறைந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் காய்கறிகளின் விலையும் உயர தொடங்கியுள்ளது.
அதேபோல், கடந்த சில நாட்களாக இஞ்சி விளைச்சல் உள்ள பகுதிகளில் கனமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இஞ்சி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
Vegetables
இந்நிலையில், ஒரு கிலோ இஞ்சி ரூ.200, பூண்டு ரூ.180, மாங்காய் ரூ.180, பச்சை மிளகாய் ரூ.30, தக்காளி ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.60, குடைமிளகாய் ரூ.30, கேரட் ரூ.45, சேப்பங்கிழங்கு ரூ.50, முருங்கைக்காய் ரூ.30, நெல்லிக்காய் ரூ.89 விற்கப்படுகிறது.