மீண்டும் தக்காளி விலை உயர்ந்தது! இரட்டை சதம் அடித்த இஞ்சி! கண்களில் கண்ணீர் வரவைக்கும் வெங்காயம் விலை.!

First Published | Aug 26, 2023, 9:57 AM IST

தக்காளி விலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து இஞ்சி, வெங்காயம், பூண்டு மற்றும் காய்கறிகளின் விலை உயர தொடங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tomato price hike

தமிழகத்தில் கடந்த சில வாரமாகவே காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இவற்றின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி விலை குறைந்ததை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்த நிலையில் தற்போது வெங்காயம் மற்றும் காய்கறி ஆகியவற்றின் விலையும் உயர தொடங்கியுள்ளது. அதேபோல், கடந்த சில நாட்களாக இஞ்சி விளைச்சல் உள்ள பகுதிகளில் கனமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இஞ்சி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Latest Videos


இந்நிலையில், ஒரு கிலோ பச்சை மிளகாய்  ரூ.30, தக்காளி ரூ.35, சின்ன வெங்காயம் ரூ.60, டபுள் பீன்ஸ் ரூ.95, பூண்டு ரூ.120, இஞ்சி ரூ.200, மாங்காய் ரூ.180, குடைமிளகாய் ரூ.30, கேரட் ரூ.45,  சேப்பங்கிழங்கு ரூ.50, முருங்கைக்காய் ரூ.30, நெல்லிக்காய் ரூ.89 விற்கப்படுகிறது. 

click me!