சர்வதேச சந்தை நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. சமீபத்தில் உச்சத்தைத் தொட்ட பிறகு, தங்கம் விலை தற்போது குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.
உலகளாவிய பொருளாதார சூழ்நிலை மற்றும் சர்வதேச சந்தை நிலவரம் இந்தியாவில் தங்கத்தின் விலையை நேர்மாறாக பாதிப்பது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை அடிக்கடி ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சமீபத்தில் தங்கம் விலை மிகக் கூடிய அளவில் உயர்ந்த நிலையில், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் மிக உயர்ந்த நிலையைத் தொட்டது.
24
சமீபத்திய விலை மாற்றங்கள்
இதற்கு முந்தைய நாட்களில் தங்கம் விலை ரூ.65,800 வரை குறைந்திருந்தது. ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து சில நாட்கள் விலை அதிகரித்து வந்தது. மே 28-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.71,480-க்கு விற்பனையானது. இப்போது, மே 29-ஆம் தேதி காலை நிலவரப்படி விலை மேலும் குறைந்துள்ளது.
34
தங்கம் விலை இன்று
அதேபோல சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் மீண்டும் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.8,895 ஆகவும், ஒரு சவரனின் விலை ரூ.320 குறைந்து ரூ.71,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாரத்திற்குள் தங்கத்தின் விலை மேலும் உயருமா அல்லது குறையுமா என்பதை சர்வதேச சந்தையின் நிலவரம் தீர்மானிக்கக்கூடும்.