குறிப்பாக, ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாயை கடந்தால், நடுத்தர வர்க்கத்தினருக்கு நகை வாங்குவது கனவாக மாறியது. தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்ட தங்க விலை, சற்று குறையும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களும் வாங்க முடியாத சூழலில் சிக்கினர். தங்கத்தை சேமிக்க நினைக்கும் மக்கள் அதிகம் காத்திருந்த நிலையில், இன்று விலை குறைந்திருப்பது ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.