Today Gold Rate in Chennai: நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

First Published Jun 3, 2023, 10:58 AM IST

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை கணிசமாக குறைந்துள்ளது. 

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.44,760க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.5,638க்கு விற்பனையானது.

இன்றைய (ஜூன் 03) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து ரூ.44,640ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.58 குறைந்து ரூ.5,580ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,056ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,448ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 77,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க;- Today Gold Rate in Chennai : புதிய உச்சத்தில் தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!

click me!