Today Gold Rate in Chennai : புதிய உச்சத்தில் தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!

First Published Jun 2, 2023, 10:03 AM IST

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. 

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,960க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.25  குறைந்து ரூ.5,620க்கு விற்பனையானது.

இன்றைய (ஜூன் 02) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.44,760ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.5,638ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,099ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,792ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 78,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க;- Today Gold Rate in Chennai : தங்கம் வாங்கணும் ஐடியா இருக்கா.. இது தான் சரியான நேரம்.. சரசரவென சரிந்தது..!

click me!