Tamilnadu Gold Rate: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று சிறிது குறைந்த விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.73,040க்கும், கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.9,130க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஒவ்வொரு நாளும் பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. அதாவது தங்கம் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இதற்க காரணம் உலக நாடுகளிடையே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சர்வதேச சந்தை மாற்றங்கள், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களை கூறலாம்.
25
தங்கம் விலை உயர்வு
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. அதாவது காலையில் சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.72,800 விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.72,600-க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.9,075-க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
35
இன்றைய தங்கம் விலை
ஆனால் அந்த சந்தோஷம் 24 மணிநேரம் கூட நீடிக்கவில்லை. அதாவது இன்று சவரனுக்கு ரூ440 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.9,130-க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 9,960-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.79,680ஆக விற்பனையாகிறது.
55
வெள்ளி விலை
வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைந்துள்ளது. அதாவது கிராம் வெள்ளி ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.110,00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.