நேற்று காலை, ஒரு பவுன் தங்கம் ரூ.1,000 உயர்ந்து ரூ.72,200-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.125 உயர்ந்ததால் ஒரு கிராம் விலை ரூ.9,025 ஆனது. இதனால் பொதுமக்கள் பதட்டத்தில் உள்ள நிலையில், மாலையிலும் விலை இன்னும் உயர்ந்தது. அதன்படி, மாலை நேரத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.9,100 ஆக உயர்ந்தது. இதனுடன், பவுன் விலை ரூ.72,800-க்கு சென்றது.