பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ககன்தீப்சிங் பேடி

Published : Aug 11, 2025, 03:01 PM ISTUpdated : Aug 11, 2025, 03:12 PM IST

தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா? அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டு குழு முக்கிய அறிவிப்பு

PREV
13
அரசு ஊழியர்கள் கோரிக்கை

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதாகும். 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தில், அரசு ஊழியர்களின் இறுதி சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. 

மேலும், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு இந்த பலன் கிடைத்தது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி பல ஆண்டுகளாக அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றன. திமுகவும்  2021 சட்டமன்றத் தேர்தலில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் இது நிறைவேற்றப்படவில்லை,

23
ஓய்வூதியம் குழு அமைத்த அரசு

தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசும் அரசும்  நடவடிக்கை எடுத்தது. அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. செப்டம்பர் 30, 2025-க்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

33
அரசு ஊழியர்கள் சங்கத்தோடு ஆலோசனை

ஆனால் தற்போது குழு அமைத்து 6 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், 7வது மாதம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்  ஓய்வூதியத் திட்டங்கள் திட்டங்கள் குறித்து பல்வேறு சங்கங்களிலும் இந்த குழு கருத்து கேட்க உள்ளது. இதன்படி, 

ஆகஸ்ட் 18, 25 செப்டம்பர் 1 மற்றும் 8 ம் தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள 32 சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஒரு சங்கத்திற்கு இரண்டு பேர் என்ற அடிப்படையில் நான் ஒன்றுக்கு 8 சங்கங்களிடம் கருத்து கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories