7th Pay Commission DA Hike 2025
மத்திய அரசு AICPI தரவுகளின் அடிப்படையில் வாழ்க்கைச் செலவைப் பொறுத்து அகவிலைப்படியை திருத்தியமைக்கிறது. மத்திய அரசு முதலில் ஜனவரி-ஜூன் மற்றும் ஜூலை-டிசம்பர் காலத்திற்கான குறியீட்டை மதிப்பாய்வு செய்து, பின்னர் 12 மாத சராசரி AICPI மதிப்பீட்டிற்குப் பிறகு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறது.
DA Hike
அதன்படி, 2025 ஜனவரியில் ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இன்னும் எதையும் அறிவிக்கவில்லை. அகவிலைப்படி/DR திருத்தம் 12 மாத அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அதிகரிப்பின் அடிப்படையிலும், அகவிலைப்படி உயர்வு 12 மாத AICPI சராசரியின் அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது என்பதை அரசு ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டும்.
AICPI Index
கடந்த ஆண்டு அக்டோபர் மாத தகவலின்படி, AICPI 144.5 ஆக உள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாத தரவுகளின்படி AICPI 145.3 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 2025 இல் அகவிலைப்படி 56 சதவீதமாக உயரக்கூடும். அரசு ஊழியர்களின் தற்போதைய அகவிலைப்படி 53% ஆகும்.
Central Government Employee
இது கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்டது. விதிகளின்படி, பிப்ரவரி மாத இறுதி வாரத்தில் மத்திய அரசு அகவிலைப்படியை அறிவிக்க வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 பெறும் ஊழியர்கள் கூடுதலாக ரூ.540 பெறுவார்கள். ரூ.2,50,000 ஊதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி ரூ.7,500 ஆக இருக்கும்.