gold rate
தங்கத்தின் மீதான ஆர்வம்
தங்கம் என்றாலே இந்திய மக்களுக்கு அலாதி பிரியம்தான். திருமணங்கள், விஷேச நாட்களில் தங்கத்தின் பங்கு முக்கியம் வகிக்கிறது. எனவே தங்கத்தின் விலை உயர்ந்தாலும் தங்கத்தை வாங்க வேண்டிய தேவை இந்திய மக்களிடம் உள்ளது.
தங்களது மகளின் திருமண தேவைக்காக அதிகளவில் தங்கம் வாங்க வேண்டிய நிலை உள்ளதால் நகைக்கடைகளில் தினமும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் இழப்பு ஏற்படாது என்ற காரணத்தால் அதிகளவில் தங்கத்தை வாங்கவும் மக்கள் விரும்புகிறார்கள்.
gold rate
திருமணத்தில் தங்கம்
இந்த நிலையில் தங்கம் அவரச தேவைக்கு உதவும் நண்பனாகவும் இருந்து வருகிறது. வீடு, கார், நிலம் உள்ளிட்ட பொருட்களை உடனடியாக விற்க முடியாத நிலை உள்ளது. எனவே தங்கத்தை பொறுத்தவரை உடனடியாக விற்கவோ அடகு வைக்கவோ முடியும். இதனால் எந்தவித அவரச தேவைக்கும் தங்க நகை உதவியாக உள்ளது. இந்த காரணத்தாலும் தங்கத்தை மக்கள் அதிகளவு வாங்கி சேமித்து வைக்கிறார்கள்.
gold rate
தங்கம் விலை உயர்வு
மேலும் சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை தொடரும் பட்சத்தில் தங்கத்தின் விலையானது முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு புதிய உச்சத்தை எட்டக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையானது. கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் ஒரு சவரனுக்கு 22 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது.
gold rate
அதிகரித்த தங்கம் விலை
2025ஆம் ஆண்டின் தொடக்கமான ஜனவரி 1ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரிக்க தொடங்கியது. முதல் நாள் கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரித்து, ரூ.7150க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.57,200 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்தது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 7,180 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 57,440 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த இரண்டு நாட்களில் ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.
gold rate
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் அதிகரித்து 7260 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 58ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 1200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.