Gold Rate
மண்ணிலும், பொன்னிலும் முதலீடு செய்தால் என்றைக்கும் வீணாகாது என்பார்கள். அதற்கு ஏற்றார் போல தங்கம் விலையும், காலி மனைகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் இரண்டிலும் பொதுமக்கள் அதிகளவில் முதலீடு செய்து வாங்கி குவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக பெண்கள் அதிகளவிலேயே தங்கத்தை ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.
Gold Rate in Tamilnadu
இதற்கு பல முக்கிய காரணங்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் அவசர தேவைகளுக்கும் தங்கத்தை வாங்கி வருகிறார்கள். மேலும் திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகள் அணிவதற்காகவும் தங்கத்தை விரும்பி வாங்குகின்றனர். அந்த வகையில் தங்கம் விலையானது கடந்த 14 ஆண்டுகளில் சவரனுக்கு 50 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
Today Gold Rate
இந்நிலையில் தான் கடந்த அக்டோபர் 31ம் தேதி தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. அந்த வகையில் ஒரு சவரன் 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் இனி தங்கமே வாங்கு முடியாது போல என்ற நிலைக்கு நடுத்தர மக்கள் சென்றுவிட்டனர். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே யாரும் எதிர்பாராத விதமாக சரசரவென சரிய தொடங்கியது. குறிப்பாக 15 நாட்களில் 4200 ரூபாய் அளவிற்கு குறைந்தது. தங்கத்தின் விலை கணிசமாக குறைந்ததால் மக்கள் நகைக்கடைகளில் குவிந்தனர். தங்கத்தின் தேவையும் அதிகரித்தது.
Gold Rate in Chennai
தங்கத்தின் விலை குறைவிற்கு அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை முக்கிய காரணம் என கூறப்பட்டு வந்தது. இந்த விலையும் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது தங்கம் விலையானது தொடர்ந்து 7வது நாட்களாக உயர்ந்து வருகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் ரூ.2,920 உயர்ந்துள்ளது.
Gold News
நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,300-க்கு விற்பனையானது.
22 Carat Gold Rate
இன்றைய (நவம்பர் 24) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. சவரன் ரூ.58,400-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.7,300-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,805-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.62,440-ஆக விற்பனையாகிறது.