Flight Tticket Price: பயணிகளுக்கு ஜாக்பாட்.. விமானக் கட்டணம் குறைகிறது.. VAT அதிரடி குறைப்பு!

Published : Oct 25, 2026, 06:41 AM IST

Flight Tticket Price: தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்ட விமானங்களுக்கான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (VAT) தவெக அரசு பெருமளவில் குறைத்துள்ளது. இதனால் விமான கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.

PREV
14
விமானக் கட்டணம் குறைகிறது

தமிழ்நாட்டில் இயங்கி வரும் திட்டமிடப்பட்ட விமானச் சேவைகளை (Scheduled flights) ஊக்குவிக்கும் நோக்கில் மாநில அரசு ஒரு மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது. விமான எரிபொருள் வரியை (VAT) பெருமளவில் குறைத்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் சார்பில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதியன்று இதற்கான அரசாணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்த அதிரடி வரிக் குறைப்பு நடவடிக்கைகள் 2026-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளன. விமான நிறுவனங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் அறிவிப்புதான்.

24
சென்னை

தலைநகர் சென்னையில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தைப் பொறுத்தவரை, எரிபொருளுக்கான வரி விகிதத்தில் கணிசமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இங்கு திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு விற்பனை செய்யப்படும் எரிபொருளுக்கு 29 சதவீதம் மதிப்புக் கூட்டு வரி வசூலிக்கப்பட்டு வந்தது. புதிய அரசாணையின்படி, இந்த வரி விகிதம் 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளை வழங்கும் திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு மட்டுமே இந்த 16 சதவீத வரி விகிதம் பொருந்தும். இதன் மூலம் விமான சேவை நிறுவனங்களின் எரிபொருள் செலவு கணிசமாகக் குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

34
பிற மாவட்டங்களுக்கான அதிரடி சலுகைகள்

சென்னையைத் தவிர்த்து மாநிலத்தின் பிற பகுதிகளில் செயல்படும் விமான நிலையங்களுக்கு இதைவிடப் பெரிய அளவிலான சலுகை வழங்கப்பட்டுள்ளது. அங்கு இயங்கும் திட்டமிடப்பட்ட விமானங்களுக்கான எரிபொருள் வரி 29 சதவீதத்திலிருந்து செங்குத்தாக 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சிறிய ரக விமானங்களுக்கும் இந்த அரசாணையில் சிறப்புச் சலுகைகள் இடம்பெற்றுள்ளன. அதிகபட்சமாக 40,000 கிலோவுக்கும் குறைவான புறப்படும் எடை கொண்ட சிறிய வகை திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.

சென்னை அல்லாத பிற விமான நிலையங்களில் இத்தகைய சிறிய விமானங்களுக்கு இதுவரை 5 சதவீதமாக எரிபொருள் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. அந்த வரி விகிதமும் தற்போது 1 சதவீதமாக குறைக்கப்பட்டு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

44
சலுகைக்கான காலக்கெடு மற்றும் நிபந்தனைகள்

அரசு அறிவித்துள்ள இந்த வரிக் குறைப்பு நடவடிக்கைகள் நிரந்தரமானவை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 2026 நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கும் இந்தச் சலுகை, சரியாக ஒரு வருட காலத்திற்கு மட்டுமே அமலில் இருக்கும். அதாவது, 2027-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதியுடன் இந்த வரிவிலக்கு முடிவுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகைகளை விமான சேவை நிறுவனங்கள் நேரடியாகப் பெற்றுவிட முடியாது.

வரிவிலக்கைப் பெற விரும்பும் நிறுவனங்கள், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள உரியப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அப்படிப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, தங்களது மாதாந்திர வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் நேரத்தில் சமர்ப்பிப்பது கட்டாயம். இந்த நடைமுறையைச் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே சலுகை வழங்கப்படும் என அரசு தரப்பில் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் இந்த அறிவிப்பு விமானப் போக்குவரத்துத் துறையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories