Bank Loan: வங்கிக் கடன் வாங்குவோர் கவனத்திற்கு... இனி அலைச்சல் இல்லை... எல்லாமே டிஜிட்டல் மயம்!

Published : Sep 15, 2026, 02:21 PM IST

Bank Loan: தமிழ்நாட்டில் வங்கிக் கடன் தொடர்பான 'உரிமை ஆவணங்கள் ஒப்படைப்புச் சான்று' மற்றும் 'கடன் அடைப்புச் சான்று' பதிவு இன்று முதல் முழுமையாக ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
13
வங்கிக் கடன் வாங்குவோர் கவனத்திற்கு...

தமிழ்நாட்டில் சொத்துப் பத்திரப் பதிவு நடைமுறையில் முக்கிய மாற்றம் ஒன்று இன்று (செப்டம்பர் 15) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, வங்கிக் கடன் தொடர்பான இரண்டு முக்கிய ஆவணப் பதிவுகள் இனி முழுவதுமாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லும் அலைச்சல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய நடைமுறையானது, தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்ட அரசாணை எண் 129-ன் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிமேல், குறிப்பிட்ட அந்த இரண்டு ஆவணங்களையும் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

23
புதிய மாற்றம் என்னென்ன?

ஒருவர் வங்கியில் கடன் பெறுவதற்காக தனது சொத்து ஆவணங்களை அடமானமாக வைக்கும்போது, 'உரிமை ஆவணங்கள் ஒப்படைப்புச் சான்று' (Deposit of Title Deeds) பதிவு செய்யப்படும். அதேபோல், வாங்கிய கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்திய பிறகு, அந்த அடமானத்தை ரத்து செய்வதற்காக 'கடன் அடைப்புச் சான்று' (Deed of Receipt) பெறப்படும். இந்த இரண்டு ஆவணங்களின் பதிவுதான் தற்போது ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை இந்த ஆவணங்களைப் பதிவு செய்ய, கடன் பெற்றவரும் வங்கி அதிகாரியும் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. அங்கு ஆவணங்களைச் சமர்ப்பித்து, கையொப்பமிட்ட பிறகே பதிவு நடைமுறைகள் முடிவடையும். இதனால், அலுவலகங்களில் கூட்ட நெரிசலும், பொதுமக்களுக்கு நேர விரயமும் ஏற்படுவதாக புகார்கள் இருந்தன.

33
இனி எல்லாமே டிஜிட்டல் மயம்

இந்த சிரமங்களை களையும் நோக்கில், நேரில் வராமலேயே ஆவணங்களைப் பதிவு செய்யும் முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 7, 2026 அன்று, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே, பதிவுத்துறை செயலாளர் இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளார்.

புதிய நடைமுறையின்படி, செப்டம்பர் 15 முதல் இந்த இரண்டு சான்றுகளும் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்கள் மற்றும் பிற சான்றிதழ்கள் கூட டிஜிட்டல் வழியாகவே வழங்கப்படும். ஆக, இனி அந்த அலைச்சல் இல்லை என்பது பொதுமக்களுக்கு சற்றே நிம்மதி அளிக்கும் செய்தி.

மக்களுக்கு இனி அலைச்சல் இல்லை

இந்த மாற்றத்தால், வங்கிக் கடன் தொடர்பான பதிவுகளுக்காக மக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்குச் செல்வது குறையும். ஆவணப் பதிவு, நகல் பெறுவது போன்ற பணிகள் எளிதாகவும், வேகமாகவும் முடியும் என்பதால், இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories