உலகத்தில் எந்த நாட்டில் எவ்வளவு வருமான வரி போடுகிறார்கள்? இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் சம்பளம் எவ்வளவு கைக்கு வரும்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் ₹1 கோடி சம்பாதித்தால் எவ்வளவு வரி கட்ட வேண்டும்? இங்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பவர்கள், வருமான வரி, சர்சார்ஜ், செஸ் எல்லாம் சேர்த்து சுமார் 30% முதல் 42% வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். எல்லாம் போக, கைக்கு சுமார் ₹70 லட்சம் தான் வரும். இதில் ஜிஎஸ்டி, பெட்ரோல்-டீசல் வரி எல்லாம் தனி கணக்கு.
25
அரேபிய நாடுகளில் முழு சம்பள பணமும் கையில்
உலகில் சில நாடுகள் 'வரி சொர்க்கம்' என்று அழைக்கப்படுகின்றன. துபாய் (UAE), சவுதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற நாடுகளில் நீங்கள் 1 கோடி சம்பாதித்தால், முழுப் பணமும் உங்களுக்கே. அரசாங்கம் 1 ரூபாய் கூட வரியாகப் பிடிக்காது. சிங்கப்பூரில் வரி விதிப்பு முறை சிறப்பாக உள்ளது. அங்கே உங்கள் ஆண்டு வருமானம் 1 கோடி ரூபாய் என்றால், வரி போக உங்கள் கைக்கு சுமார் ₹79 லட்சம் கிடைக்கும்.
35
வங்கதேசம் முன்னணி
வரி சேமிப்பில் நம் அண்டை நாடான வங்கதேசம் முன்னணியில் உள்ளது. இங்கு 1 கோடி சம்பளம் வாங்குபவருக்கு, வரிக்குப் பிறகு சுமார் ₹76 லட்சம் கையில் கிடைக்கும். நீங்கள் அமெரிக்கா சென்று 1 கோடி சம்பாதிக்க வேண்டும் என்று கனவு கண்டால், அங்கும் வரி ஒன்றும் குறைவில்லை. மத்திய மற்றும் மாநில வரிகள் எல்லாம் சேர்த்து உங்கள் கைக்கு சுமார் ₹63 லட்சம் தான் வரும்.
லண்டன் அல்லது யூகே-வின் மற்ற நகரங்களில் வேலை செய்பவர்களுக்கு வரிச் சுமை இன்னும் அதிகம். இங்கு 1 கோடி சம்பளம் வாங்கும் ஒருவருக்கு, ஆண்டு இறுதியில் கையில் மிஞ்சுவது வெறும் ₹54.9 லட்சம்தான். உலகில் அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது. இங்கு 1 கோடி சம்பாதித்தால், கைக்கு மிஞ்சுவது சுமார் ₹45 லட்சம்தான்.
55
ஜப்பானும் விதிவிலக்கு அல்ல
உலகில் அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இங்கு 1 கோடி ரூபாய் சம்பாதித்தால், வரி செலுத்திய பிறகு கைக்கு வருவது வெறும் ₹44 லட்சம்தான். அதாவது, பாதிக்கும் மேல் சம்பளம் வரியிலேயே போய்விடும். ஆதாரம்: செபியில் பதிவு பெற்ற ஆய்வுப் பகுப்பாய்வாளரும் டிரேடருமான சுனில் குர்ஜர், தனது சமூக வலைதளமான X தளத்தில் இந்த புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.