ஆதார் கார்டு இருக்கா? மத்திய அரசின் ரூ.50,000 உதவி தொகை கிடைக்கும்.! எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ.!

Published : Mar 24, 2026, 05:29 PM IST

Svanidhi Scheme in Tamil : ஆதார் கார்டு மட்டும் இருந்தால் மத்திய அரசு அளிக்கும் ரூ.50,000 கடன் உதவி பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த திட்டம் யாருக்கு உதவும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
Svanidhi Yojana Loan

பிரதம மந்திரியின் ஸ்வநிதி யோஜனா தெருவோரத்தில் இருக்கும் வியாபாரிகள், தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்கள் முடிந்திருப்பவர்கள் சலவை தொழிலாளர்கள் போன்ற சிறு தொழில் செய்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தொழிலை விரிவுபடுத்தவும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு சிறப்பான கடன் உதவி திட்டமாகும். இந்தத் திட்டம் மார்ச் 2030 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் யாருக்கு பொருந்தும்? யார் இதற்கு விண்ணப்பிக்கலாம்? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

26
கடன் தொகையின் அளவுகள்

இந்தத் திட்டமானது மூன்று நிலைகளில் கடனை வழங்குகிறது. முதல் தவணை ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை. இதை திருப்பி செலுத்துவதற்கான காலம் ஒரு ஆண்டாகும். இரண்டாவது தவணை முதல் கடனை சரியாக திருப்பி செலுத்திய பின்னர் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இதை முடிக்க 18 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இரண்டாவது கடனை முடித்த பின்னர் ரூ.50,000 கடன் மூன்றாவது தவணையில் வழங்கப்படும். இதை முடிப்பதற்கு 36 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

36
தகுதிகள்

நகர்ப்புற பகுதிகளில் வியாபாரம் செய்யும் அனைத்து தெருவோர வியாபாரிகளும் இந்த திட்டத்தில் பலனடையலாம். உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட விற்பனைச் சான்றிதழ் அல்லது அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். சர்வேயில் விடுபட்டவர்கள் அல்லது புதிதாக தொழில் தொடங்குபவர்கள் உள்ளாட்சி அமைப்பிடம் பரிந்துரை கடிதம் பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

46
திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்

இந்த கடனை பெற நீங்கள் எந்த சொத்தையும் அடமானம் வைக்க தேவையில்லை. கடனை சரியாக திருப்பி செலுத்துபவர்களுக்கு 7 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இது நேரடியாக உங்கள் கணக்கில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரவு வைக்கப்படும். நீங்கள் டிஜிட்டல் முறையில் வியாபாரம் செய்பவராக இருந்தால் ஆண்டுக்கு ரூ.1,200 வரை கேஷ்பேக் சலுகை பெறலாம்.்கடனை முன்கூட்டியே கட்டி முடித்தால் எந்த அபராத கட்டணமும் வசூலிக்கப்படாது.

56
விண்ணப்பிக்கும் முறை

நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்:

ஆன்லைன் முறை: pmsvanidhi.mohua.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். உங்கள் மொபைல் எண்ணைப் பதிவிட்டு OTP மூலம் உள்நுழையவும். தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆவணங்களை (Aadhaar, Vending ID) பதிவேற்றவும். உங்களுக்குப் பிடித்த வங்கியைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

ஆஃப்லைன் முறை: உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள பொதுச் சேவை மையத்தை (CSC) அல்லது வங்கிக் கிளையை அணுகி விண்ணப்பிக்கலாம்.

66
தேவையான ஆவணங்கள்

ஆதார் அட்டை (மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்).

விற்பனைச் சான்றிதழ் (CoV) அல்லது அடையாள அட்டை (ID Card).

வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் (IFSC Code உடன்).

வாக்காளர் அடையாள அட்டை (தேவைப்படின்)

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories