அனைவராலும் ஆண்டுக்கு ரூ. 1.50 லட்சம் முதலீடு செய்ய முடியாது. அதனால்தான், உங்கள் வருமானம் மற்றும் நிதி நிலைக்கு ஏற்ப சேமிப்பின் அளவை நீங்கள் தீர்மானிக்கலாம். மாதாந்திர முதலீட்டின் அடிப்படையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு திரட்டக்கூடிய நிதியின் உத்தேசத் தொகை பின்வருமாறு.
* மாதம் ரூ.4,167: ஆண்டுக்கு ரூ.50,000 வீதம், 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.7.50 லட்சம் முதலீடு செய்யப்படும். முதிர்வு காலத்தில், தோராயமாக ரூ.23 லட்சம் பெறலாம்.
மாதம் ரூ.5,000 வீதம், ஆண்டுக்கு ரூ.60,000 செலுத்தினால், 15 ஆண்டுகளில் ரூ.9 லட்சம் கிடைக்கும். இறுதியில் உங்களுக்குச் சுமார் ரூ.28 லட்சம் கிடைக்கும்.
* மாதம் ரூ.10,000: ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம், 15 ஆண்டுகளில் ரூ.18 லட்சம் முதலீடு செய்யப்படும். முதிர்வு காலத்தில் சுமார் ரூ.55.42 லட்சம் பெறலாம்.
* மாதம் ரூ.12,500: ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வீதம், 15 ஆண்டுகளில் ரூ.22.50 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் சுமார் ரூ.70 லட்சம் பெறலாம்.
கணக்கைத் திறக்க, அருகிலுள்ள தபால் நிலையத்தையோ அல்லது இந்தத் திட்டத்தை வழங்கும் வங்கியையோ நீங்கள் தொடர்பு கொள்ளலாம். பெண்ணின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் அடையாள அட்டை, முகவரிச் சான்று ஆவணங்கள், பான் கார்டு மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி கணக்கைத் திறக்கலாம்