லாபத்தை அள்ளுங்கள்: சந்தை ஏற்றத்தில் 5 பங்குகள் ₹100-க்குள்!

Published : Jun 05, 2025, 08:53 AM IST

சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதால் ஆசிய ஐரோப்பிய சந்தைகள் மூன்று நாட்கள் சரிவுக்கு பிறகு ஏற்றம் அடைந்தன. இதனால், சந்தை நிபுணர்கள் ₹100 க்குள் வாங்கக்கூடிய 5 பங்குகளை பரிந்துரை செய்கின்றனர்.

PREV
17
வாங்கி குவியுங்கள் லாபத்தை அள்ளுங்கள்

மூன்று நாட்கள் சரிவுக்குப் பிறகு இந்திய பங்கு சந்தையில் புதன்கிழமை திருப்புமுனை ஏற்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டென் நிப்டி 77 புள்ளிகள் உயர்ந்து 24,620 இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 80 ஆயிரத்து 998 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல் பேங்க் நிப்டி 76 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதால் ஆசிய ஐரோப்பிய சந்தைகள் ஏற்றம் அடைந்தன. அதன் தாக்கம் காரணமாக இந்திய சந்தைகளும் ஏற்றம் அடைந்தன. நேற்றைய வர்த்தகத்தில் அன்றாட பயன்பாட்டு பொருட்கள், பொதுத்துறை பங்குகள், வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் ஏற்றம் அடைந்தன.தேசிய பங்குச்சந்தை குறியீட்டென் நிப்டி 24,845 என்பது எதிர்ப்பு நிலையாகவும், 24,500 வலுவான ஆதரவாகவும் செயல்படும் என கூறும் சந்தை நிபுணர்கள், சந்தையின் நிதானமான போக்கை முதலீட்டாளர்களும் நிதானமாக கையாள வேண்டும் அறிவுறுத்துகின்றனர். மேலும் Bank Nifty தற்போது சிறிய அளவில் புலிஷாக இருக்கிறது என்றும் ஆர்பிஐ நாணயக் கொள்கை முடிவிற்கு முன் நிலையான மாற்றம் இல்லை எனவும் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.

27
இன்றைய பரிந்துரைகள் — ₹100 க்குள்

பங்குச்சந்தை நிபுணர்கள் இன்று வாங்ககூடிய, 100 ரூபாய்க்குள் இருக்கும் பங்குகளை பரிந்துரை செய்கின்றனர். அவர்கள் சொல்லும் விலையில் நாம் முதலீடு செய்யும் பட்சத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. Belrise Industries, IOB (இந்தியன் ஒவர்சீஸ் வங்கி),Shriram Properties, SJVN, Jain Irrigation Systems ஆகிய பங்குகள் விலை 100 ரூபாய்க்குள் இருக்கும் நிலையில் அவற்றை முதலீட்டாளர்கள் தேர்வு செய்து லாபத்தை அறுவடை செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

37
IOB (இந்தியன் ஒவர்சீஸ் வங்கி)

இந்றைய நிலையில் நிபுணர்கள் பரிந்துரை செய்யும் முதல் பங்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பங்கு. 41 ரூபாய் 20 காசுகளுக்கு அவற்றை வாங்கலாம் என அறிவுறுத்தும் நிபுர்கள், அவற்றின் விலை 45 ரூபாயை தொடும் என கூறுகின்றனர். ஸ்டாப்லாஸ் விலை ரூ.40

IOB (இந்தியன் ஓவர்சிஸ் வங்கி)

வாங்கும் விலை: ₹41.20

இலக்கு விலை: ₹45

ஸ்டாப் லாஸ்: ₹40

47
Belrise Industries

Belrise Industries பங்குகளை 97 ரூபாயக்கு வாங்கலாம் என பரிந்துரை செய்யம் சந்தை ஆலோசகர்கள், இலக்குவிலையாக 105 ரூபாயாக வைத்துக்கொள்ளலாம் என கூறுகின்றனர். அதேபோல் 95 ரூபாய்க்கு ஸ்டாப்ஸாஸ் கட்டாயம் எனவும் ஆனால் இது நல்ல விலை என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

Belrise Industries

வாங்கும் விலை: ₹97

இலக்கு: ₹105

ஸ்டாப் லாஸ்: ₹95

57
Shriram Properties

Shriram Properties நிறுவன பங்குகளை 93 ரூபாய் விலையில் வாங்கி பயன் அடையலாம் என்றும் 105 ரூபாய் வரை அவை உச்சம் செல்லும் எனவும் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஸ்டாப் லாஸ் ரூ.90.80

Shriram Properties

வாங்கும் விலை: ₹93 - ₹94.30

இலக்குகள்: ₹96, ₹98, ₹102, ₹105

ஸ்டாப் லாஸ்: ₹90.80

67
SJVN (Satluj Jal Vidyut Nigam Limited)

SJVN (Satluj Jal Vidyut Nigam Limited) பங்குகளை 98 ரூபாய் 30 காசுகளுக்கு வாங்கலாம் என பரிந்துரை செய்யப்படுகிறது. அதிகபட்சம் 101 ரூபாய் 50 காசுகள் வலை செல்ல வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.96.80. SJVN லிமிடெட் என்பது இந்தியாவில் ஒரு நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும், இது நீர்மின் சக்தி உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இது மின் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

SJVN

வாங்கும் விலை: ₹98.30

இலக்கு விலை: ₹101.50

ஸ்டாப் லாஸ்: ₹96.80

77
Jain Irrigation Systems

Jain Irrigation Systems நிறுவன பங்குகளை 61 ரூபாய் 50 காசுகளுக்கு வாங்கலாம். இலக்கு விலை 68 ரூபாயாகவும் ஸ்டாப் லாஸ் 58 ரூபாயாகவும் நிர்ணயிப்பது நல்லது.Jain Irrigation Systems விவசாயத் துறையில், குறிப்பாக பாசன அமைப்புகள், பிளாஸ்டிக் குழாய்கள் போன்ற தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Jain Irrigation Systems

வாங்கும் விலை: ₹61.50

இலக்கு விலை: ₹68

ஸ்டாப் லாஸ்: ₹58

Read more Photos on
click me!

Recommended Stories