40 வயதில் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறீர்களா? இதெல்லாம் கட்டாயம்!

Published : Jun 07, 2025, 10:35 AM IST

40 வயதில் முதலீடு செய்வது காலதாமதம் இல்லை. சீரான திட்டமிடல் மற்றும் நிதி ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் நீண்டகால செல்வத்தை உருவாக்கலாம். முதலீட்டிற்கு முன் உங்கள் நிதி நிலையை மதிப்பீடு செய்து, வாழ்க்கை குறிக்கோள்களை திட்டமிடுங்கள்.

PREV
110
40 வயதில் முதலீட்டை தொடங்கலாம்

40 வயதில் தொழிலை தொடங்கி வெற்றி பெற்றவர்கள் ஏராளம். அதேபோல் 40 வயதில் முதலீடு செய்வது ஒன்றும் காலதாமதம் இல்லை என்கின்றனர் சந்தை நிபுணர்கள். காலதாமதமாக முதலீட்டை தொடங்கினாலும், சீரான திட்டத்துடனும் நிதி ஆலோசகரின் வழிகாட்டலுடனும், நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்கலாம், ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையை பாதுகாக்கலாம்.

210
முதலீட்டிற்கு முன் உங்கள் நிதி நிலையை மதிப்பீடு செய்யுங்கள்

முதலில் உங்கள் வருமானம், செலவுகள், கடன்கள், சேமிப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் பட்டியலிட்டு உங்கள் நிகர மதிப்பை கணிக்க வேண்டும். இதன் மூலம் எங்கு முன்னேற்றம் தேவை என்பதையும் புரிந்துகொள்ள முடியும். அதேபோல் வீட்டில் உள்ள மனைவி, குழந்தைகளுடன் உங்களது நிதி முதலீடுகள் குறித்து ஆலோசனை கேட்கும் போது அவர்கள் அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை சொல்வார்கள். குடும்ப உறுப்பினர்களை விட நமக்கு யாராலும் அலோசனை சொல்ல முடியாது.

310
வாழ்க்கை குறிக்கோள்களை திட்டமிடுங்கள்

நிதிமுதலீடுகள் குறித்து திட்டமிடும் போது உங்களது முதியோர் பராமரிப்பு ஏற்பாடுகள் குறித்து முடிவெடுக்க வேண்டும். அதேபோல் உங்களுக்கு வருமானம் அளிக்கும் இரண்டாவது தொழில் சைட்ஹில்ஸ் ஆகியவை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து ஆலோசிக்க வேண்டும், ஆன்மிக பயணங்கள், தர்ம வழிகளுக்கான பங்களிப்பு, மருத்துவ செலவுக் கட்டுப்பாடுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.

மருத்துவ செலவுக் கட்டுப்பாடுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்

முதியோர் பராமரிப்புக்கான ஏற்பாடுகள்

இரண்டாவது தொழில் / சைட் ஹஸ்ல்

அறநிலையங்கள், தர்ம வழிகளுக்கான பங்களிப்பு

மருத்துவ செலவுக் கட்டுப்பாடுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்

410
கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் - அபாயக் கட்டுப்பாடு

40-வயதில் முதலீட்டில் சிக்கனம் மிக முக்கியம். அதிக வளர்ச்சி தரும் பங்குகள் போன்ற சொத்துகளிலும், பணத்தை பாதுகாக்கும் வங்கி சேவிங்ஸ், பத்திரங்கள் போன்ற குறைவான அபாய முதலீடுகளிலும் சமமாக பங்கீடு செய்யுங்கள்.இது முதலீடுகளில் ஏற்படும் அபாயங்களில் இருந்து நம்மை முற்றிலும் பாதுகாக்கும்.

510
வகைபடுத்தல் (Diversification)

அனைத்து முதலீடுகளையும் ஒரே இடத்தில் முதலீடு செய்ய வேண்டாம். பல்வேறு திட்டங்களில் பிரித்து பிரித்து முதலீடு செய்யும் போது வருமானம் அதிகரிக்கும். லாபம் குறையும் போதும் பெரிய பாதிப்பு இருக்காது. பத்திரங்கள், எஃப்டி, ரியல் எஸ்டேட் ஆகியற்றில் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து முதலீடு செய்யும் போது திடீர் நஷ்டத்தை தவிர்க்கலாம்.

பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள்

நிலையான வருமானம் தரும் பத்திரங்கள், வங்கி டெப்பாசிட்கள்

நிலம் மற்றும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் (REITs)

தங்கம், சுவர்ண பத்திரங்கள் (SGB) – பணவீக்கத்திற்கு எதிராக பாதுகாப்பு

610
இதனை கட்டிப்பாக செய்யுங்கள்

அதிக வட்டி விகிதம் உள்ள கடன்களை முழுமையாக அடைப்பது நல்லது.கடன் பத்திரங்கள், கிரெடிட் கார்டு கடன் போன்றவற்றை மிக விரைவாக முடிக்க வேண்டும். இது எதிர்கால முதலீட்டுகளுக்கு நிதியை பாதுகாக்கும். மேலும் மாதாமாதம் வட்டி கட்டுவதும் குறையும்.

710
அவசர நிதியை உருவாக்குங்கள்

6 முதல் 12 மாத வரையிலான செலவுகளை அவசரநிலை நிதியாக வைத்திருக்க வேண்டும். இது வேலை இழப்புகள், உடல்நல பிரச்சனைகள் போன்ற சிக்கல்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். அதேபோல் திடீர் பணச்செலவுகளில் இருந்து நம்மை காப்பாற்றும்.

810
ஓய்வுத் திட்டத்தை வலுப்படுத்துங்கள்

உங்களிடம் இன்னும் 15-20 வருடங்கள் உள்ளதால் ஓய்வுக்குப் பின் வாழ்க்கையை பாதுகாக்க கீழ்க்கண்ட திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.தேசிய ஓய்வுத் திட்டம் (NPS) – வரி சலுகையுடன் வளர்ச்சி வாய்ப்பும் தரும், அதேபோல் ஊழியர் நல நிதி (EPF) – நீண்ட கால பாதுகாப்பு தரும் திட்டமாகும். மேலும் பொது நல நிதி (PPF) – குறைந்த அபாயத்துடன் நீண்ட கால சேமிப்புக்கு உதவும்.

910
நிதி ஆலோசகரின் வழிகாட்டல் பெறுங்கள்

தகுதியான நிதி ஆலோசகர் உங்கள் வருமானம், குடும்ப தேவைகள் மற்றும் எதிர்கால இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு சரியான வழிகாட்டல்களை வழங்குவார். இது வரிவிலக்கு திட்டங்கள், இன்வெஸ்ட்மெண்ட் பங்கேற்புகள், வாழ்க்கை காப்பீடு மற்றும் சொத்து திட்டமிடலுக்கும் உதவும்.

1010
தகவலறிந்து முதலீடு செய்யுங்கள்

முன்னேற்றமடைந்த நிதி திட்டங்கள் மற்றும் முதலீட்டுக்கான பாதுகாப்பு வழிகாட்டல்களை RBI மற்றும் SEBI போன்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து பெறலாம்.திட்டமுடனும் முதலீட்டைத் தொடங்குங்கள் – வயது ஒரு தடையல்ல, உங்கள் முடிவுகள் தான் முக்கியம்!

Read more Photos on
click me!

Recommended Stories