Fixed deposit special schemes deadline
பல்வேறு வங்கிகளின் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு நிறுத்தப்படலாம் அல்லது வட்டிவிகிதம் குறைக்கப்படலாம். எனவே பாதுகாப்பான முதலீட்டை விரும்புவோர் இத்திட்டங்களில் உடனே கணக்கு தொடங்கலாம். மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி விகிதங்களின் பலனும் கிடைக்கும்.
எஸ்பிஐ அம்ரித் கலாஷ், எஸ்பிஐ அம்ரித் அம்ரித் விருஷ்டி, எஸ்பிஐ வீகேர், ஹெச்டிஎஃப்சி வங்கி 35 மாத பிக்சட் டெபாசிட், இண்ட் சூப்பர், ஐடிபிஐ வங்கி உத்சவ் காலபிள் போன்ற சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2025 ஆகும்.
SBI Bank Special FD rates
எஸ்பிஐ அம்ரித் கலாஷ் என்பது 444 நாள் சிறப்பு நிரந்தர வைப்புத் திட்டமாகும், இது அனைத்து எஸ்பிஐ நிரந்தர வைப்புத் திட்டங்களிலும் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. பொது குடிமக்களுக்கு இதன் வட்டி விகிதம் 7.25 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி SBI வழங்கும் சிறப்பு FD ஆகும். இது பொது குடிமக்களுக்கு 7.10 சதவீத வட்டி விகிதத்தையும் மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. நாட்டின் முன்னணி கடன் வழங்குநர் சிறப்பு FD-க்கான காலக்கெடுவை பல முறை நீட்டித்துள்ளார்.
எஸ்பிஐ வீகேர் சிறப்புத் திட்டம் மூத்த குடிமக்களை மையமாகக் கொண்டது. அவர்களுக்கு 7.50 சதவீத வட்டி விகிதம் வழங்குகிறது. இதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Indian Bank Special FD rates
இந்தியன் வங்கி:
இந்தியன் வங்கி இரண்டு சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களைக் கொண்டுள்ளது - IND சுப்ரீம் 300 நாட்கள் மற்றும் IND சூப்பர் 400 நாட்கள்.
IND சுப்ரீம் 300 நாள் திட்டம் பொது குடிமக்களுக்கு 7.05%, மூத்த குடிமக்களுக்கு 7.55%, மிக மூத்த குடிமக்களுக்கு 7.80% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
IND சூப்பர் 400 நாள் திட்டம் பொது குடிமக்களுக்கு 7.30 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதம், சூப்பர் சீனியர்களுக்கு 8.05 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
IDBI Bank Special FD rates
ஐடிபிஐ வங்கி:
ஐடிபிஐ வங்கி உத்சவ் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. பல்வேறு வட்டி விகிதங்களுடன் இவற்றை வழங்குகிறது.
300 நாட்கள் சிறப்பு திட்டத்தில், வட்டி விகிதம் 7.05 சதவீதமாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவீதம், சூப்பர் சீனியர்களுக்கு 7.55 சதவீதம் கிடைக்கும்.
அதன் 375 நாட்கள் சிறப்புத் திட்டத்தில், பொது குடிமக்களுக்கு வட்டி விகிதம் 7.25%. மூத்த குடிமக்களுக்கு 7.75%. சூப்பர் சீனியருக்கு 7.9%.
444 நாட்கள் சிறப்புத் திட்டத்தில், பொது குடிமக்களுக்கு வட்டி விகிதம் 7.35 சதவீதம். மூத்த குடிமக்களுக்கு 7.85%, சூப்பர் சீனியர்களுக்கு 8%.
555 நாட்கள் சிறப்புத் திட்டத்தில், பொது குடிமக்களுக்கு 7.4 சதவீதம் வட்டி விகிதம் தரப்படும். மூத்த குடிமக்களுக்கு 7.9%, சூப்பர் சீனியர்களுக்கு 8.05%.
700 நாட்கள் சிறப்புத் திட்டத்தில், பொது குடிமக்களுக்கு வட்டி விகிதம் 7.2%, மூத்த குடிமக்களுக்கு 7.7%, சூப்பர் சீனியர்களுக்கு 7.85% வட்டி கிடைக்கும்.
Punjab & Sind Bank Special FD rates
பஞ்சாப் சிந்து வங்கி:
பஞ்சாப் சிந்து வங்கி வழங்கும் 333, 444, 555, 777, மற்றும் 999 நாள் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் மார்ச் 31 க்குள் கணக்கைத் தொடங்க வேண்டும்.
333 நாட்கள் சிறப்புத் திட்டத்தில், பொது வாடிக்கையாளர்களுக்கு 7.20 சதவீதம் வட்டி விகிதம் கொடுக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு 7.70%. சூப்பர் சீனியர்களுக்கு 7.85%.
444 நாட்கள் சிறப்புத் திட்டத்தில், பொது வாடிக்கையாளருக்கு 7.30%, மூத்த குடிமக்களுக்கு 7.80%, மிக மூத்த குடிமக்களுக்கு 7.95% வட்டி விகிதம் உள்ளது.
555 நாட்கள் சிறப்புத் திட்டத்தில், குறைந்தபட்சம் 7.50 சதவீதம் வட்டி விகிதம் பெறலாம். மூத்த குடிமக்களுக்கு 8.00%, சூப்பர் சீனியர்களுக்கு 8.15 % வட்டி விகிதம் கிடைக்கும்.
777 நாட்கள் சிறப்புத் திட்டத்தில், அடிப்படை வட்டி விகிதம் 7.25%. மூத்த குடிமக்களுக்கு 7.75%, மிகவும் மூத்த குடிமக்களுக்கு 7.90% வட்டி தரப்படுகிறது.
999 நாட்கள் சிறப்புத் திட்டத்தில், வட்டி விகிதம் 7.40 சதவீதம். மூத்த குடிமக்களுக்கு 7.90%, சூப்பர் சீனியர்களுக்கு 8.05% ஆகும்.
HDFC Bank Special FD rates
ஹெச்டிஎஃப்சி வங்கி:
ஹெச்டிஎஃப்சியின் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டம் 35 மாதங்களுக்கானது. இத்திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.35 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.85 சதவீதம் தருகிறது.