Best Savings Scheme
2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி-மார்ச்) பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல் வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், ஜனவரி 1, 2025 முதல் மார்ச் 31, 2025 வரை பொருந்தும். மூன்றாம் காலாண்டில் (அக்டோபர் 1, 2024) அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களில் இருந்து மாற்றம் ஏதும் இல்லை." என நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
சமீபத்திய அறிவிப்பின்படி, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கிற்கான வட்டி விகிதம் 7.1%, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு 4% ஆக தக்கவைக்கப்பட்டுள்ளன. கிசான் விகாஸ் பத்ரா (KVP) கணக்கில் 7.5% வட்டி விகிதம் வழங்கப்படும். இதில் செய்யப்படும் முதலீடுகள் 115 மாதங்களில் முதிர்ச்சியடையும். இதேபோல், முதலீட்டாளர்களுக்கு வழக்கமான மாத வருமானத்தை வழங்கும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (PO-MIS) 7.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஜனவரி-மார்ச் 2025 காலாண்டில், சீனியர் சிட்டிசன்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) 8.2% வட்டி விகிதத்துடன் தொடரும். தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), தொடர்ந்து 7.7% வட்டி விகிதத்தில் கிடைக்கும்.
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட்களுக்கு தொடர்ந்து 8.2% வட்டி விகிதம் கிடைக்கும். 3 ஆண்டு கால டைம் டெபாசிட் திட்டத்திற்கும் 7.1% வட்டி விகிதம் தொடர்கிறது.
पोस्ट ऑफिस मंथली इनकम स्कीम में जमा राशि पर 6.6 फीसदी सालाना ब्याज मिलता है। अगर आपने इस स्कीम में 9 लाख रुपए जमा किए हैं, तो 6.6 फीसदी सालाना ब्याज दर के हिसाब से इस रकम पर कुल ब्याज 59400 रुपए होगा। इस रकम को साल के 12 महीनों में बांट दिया जाएगा। इस तरह हर महीने का ब्याज करीब 4950 रुपए होगा। वहीं, अगर सिंगल अकाउंट के जरिए 4,50,000 लाख रुपए जमा करते हैं, तो हर महीने ब्याज 2475 रुपए मिलेगा। (फाइल फोटो)
முதலீட்டாளர்கள் மாதாந்திர முதலீடு செய்ய அனுமதிக்கும் 5 ஆண்டுகளுக்கான ரெக்கரிங் டெபாசிட் திட்டம் (RD) 6.7% வட்டி விகிதத்தை வழங்கும். இந்த சிறுசேமிப்புத் திட்டங்கள் மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வட்டியுடன் கூடிய உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன. இவை அரசுத் திட்டங்களாக இருப்பதால் முதலீடு செய்யும் பணத்திற்கு முழு பாதுகாப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.