NPCI
நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஆன்லைன் பேமெண்ட் செயலிகளுக்கு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ (UPI) பரிவர்த்தனை செயலிகளுக்கான மார்கெட் கேப்பை 30% க்குள் கட்டுப்படுத்தும் திட்டத்தை மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
NPCI on Market Cap
முதலில், டிசம்பர் 31, 2024 க்குப் பிறகு மார்க்கெட் கேப் கட்டுப்பாட்டை அமல்படுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது டிசம்பர் 31, 2026 க்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. என்பிசிஐ (NPCI) இரண்டாவது முறையாக இந்தக் காலக்கெடுவை நீட்டித்துள்ளது, இதற்கு முன்பாக 2022 இல் ஒத்திவைக்கப்பட்டது.
UPI Payments
தி எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நடத்திய கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல உரையாடல்கள் நடந்தன என்றும் இந்த கட்டத்தில் மார்க்கெட் கேப் கட்டுப்பாட்டை அமல்படுத்துவது UPI பயன்பாட்டைக் குறைக்கலாம் என்று என்பிசிஐ கருதுகிறது.
UPI transactions
தற்போதைய நிலையில் வரும் 2025ஆம் ஆண்டில் UPI பரிவர்த்தனை 10 மடங்கு வளர்ச்சியடையும் சாத்தியம் உள்ளது என்றும் கணக்கிப்பட்டுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Google Pay and PhonePe
என்பிசிஐ விதிக்கும் கட்டுப்பாடு தாமதமாவது முதன்மையாக ஃபோன்பே மற்றும் கூகுள் பே ஆகியவற்றுக்குப் பலனளிக்கிறது. இவை இரண்டும் UPI சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. சுமார் 90% UPI பரிவர்த்தனைகள் இந்தச் செயலிகள் மூலம் நடைபெறுகின்றன. நவம்பர் 2024 இல், போன் பே (PhonePe) மூலம் 7.4 பில்லியன் UPI பேமெண்டுகள் நடைபெற்றுள்ளன. அதே நேரத்தில் கூகுள் பே (Google Pay) மூலம் 5.7 பில்லியன் பேமெண்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 15.4 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் இவற்றின் மூலம் நடந்திருக்கின்றன. அடுத்தடுத்த இடங்களில் Navi, Cred, Paytm போன்றவை உள்ளன.
WhatsApp Pay
என்பிசிஐ NPCI வாட்ஸ்அப் பே (WhatsApp Pay) மீதான அனைத்து பயனர் கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது. இதன் மூலம் 500 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்கள் UPI வசதியை பயன்படுத்த முடியும். ஆரம்பத்தில் ஒரு மில்லியன் பயனர்கள் மட்டுமே வாட்ஸ் பே வசதியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். இது 2020 இல் இருந்து 2022 வரை படிப்படியாக 100 மில்லியனாக அதிகரிக்கப்பட்டது. இப்போது முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது.