Small Business Ideas for Women : ரெடிமேட் பிளவுஸ்களை மொத்த விலைக்கு வாங்கி, ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் மாதம் ஆயிரக்கணக்கில் எப்படி சம்பாதிக்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
இப்போதெல்லாம் பெண்கள் சுயதொழிலில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக, ஜவுளித் துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. புடவைகள் மட்டுமல்ல, இப்போது ‘ரெடிமேட் பிளவுஸ்களுக்கும்’ மார்க்கெட்டில் பயங்கர டிமாண்ட். குறைந்த முதலீட்டில், யாருடைய உதவியும் இல்லாமல் வீட்டிலிருந்தே இந்தத் தொழிலை எப்படித் தொடங்குவது என்று பார்க்கலாம்.
25
ரெடிமேட் பிளவுஸ் பிசினஸ்
இந்த பிசினஸில் முதலீடு ரொம்பவே குறைவு. பொதுவாக, தினசரி பயன்பாட்டுக்கான பிளவுஸ்கள் மொத்த விலையில் ரூ.130 முதல் ரூ.150 வரை கிடைக்கும். இவற்றை நாம் சில்லறை விலையில் ரூ.250 முதல் ரூ.300 வரை சுலபமாக விற்கலாம். ஒரு பிளவுஸுக்கு சுமார் ரூ.50 முதல் ரூ.100 வரை லாபம் கிடைக்கும். விலையைப் பொறுத்து துணியின் தரம் மாறும், அதனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான தரத்தை கொடுப்பது முக்கியம்.
35
கொள்முதல் மற்றும் விற்பனை
மொத்த விற்பனைக் கடைகளில் குறைந்தபட்சம் 15 முதல் 50 பிளவுஸ்கள் அல்லது ரூ.5000 மதிப்புள்ள சரக்குகளை எடுத்தால் மட்டுமே நமக்கு குறைந்த விலையில் கிடைக்கும். இவற்றை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகவோ விளம்பரம் செய்து விற்கலாம். குறைந்த லாபம் வைத்துக்கொண்டு அதிக எண்ணிக்கையில் பிளவுஸ்களை விற்றால், மாத இறுதியில் நல்ல வருமானம் பார்க்கலாம். வெறும் பிளவுஸ்கள் மட்டுமல்ல, கம்ப்யூட்டர் வொர்க் பிளவுஸ்களுக்கும் இப்போது நல்ல கிராக்கி உள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனைகளால் நமக்கு எவ்வளவு லாபம் வருகிறது என்பதில் சில சமயம் குழப்பம் வரலாம். அதனால், ஒவ்வொரு மாதமும் விற்ற பிளவுஸ்களின் பணத்தை ஒரு உண்டியலில் அல்லது டப்பாவில் போட்டு சேமித்து வாருங்கள். மாதம் இறுதியில், நம் பிசினஸ் எப்படி நடந்திருக்கிறது, அசல் எவ்வளவு, லாபம் எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியும்.
55
எதிர்கால வாய்ப்புகள்
ரெடிமேட் பிளவுஸ்களுடன் சேர்த்து, எதிர்காலத்தில் புடவைகள், இமிடேஷன் நகைகள், ஒரு கிராம் தங்க நகைகள் போன்ற பிசினஸையும் எப்படிச் செய்வது, எங்கிருந்து சரக்குகளை வாங்குவது என்பது பற்றியும் யோசிக்கலாம். உண்மையாகவே வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்பும் பெண்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.