பல லட்சம் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய SIP திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிலருக்கு STP பற்றியும் தெரிந்திருக்கும். SIP என்பது ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை முதலீடு செய்வதாகும். இம்முறையில், பெரும்பாலும் மாதந்தோறும் முதலீடு செய்யப்படுகிறது.
இதற்கு நேர்மாறாக, STP முறையில் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டில், ஒரு டெப்ட் ஃபண்டில் முதலீடு பெரிய தொகை ஒன்றை முதலீடு செய்கிறார்கள். பிற்கு அதை சீரான இடைவெளியில் படிப்படியாக ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு மாற்றுவார்கள். இந்த செயல்முறை, குறைந்த ஆபத்துள்ள டெப்ட் ஃபண்டுகளில் இருந்து ஈக்விட்டி ஃபண்டுகள் போன்ற அதிக ரிஸ்க் உள்ள ஃபண்டுகளுக்கு நிதியை படிப்படியாக மாற்ற உதவுகிறது. இம்முறையில் முதலீட்டாளர்கள் சிறந்த வருவாயை ஈட்டும் அதே வேளையில் அதிக ரிஸ்க்கையும் சமாளிக்கலாம்.