குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! மதுபானங்கள் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Published : Feb 11, 2025, 02:50 PM IST

மதுபானங்கள் விலை திடீரென உயர்த்தப்பட்ட சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீர் வகைகளின் விலையும் 15% உயர்த்தப்பட்டுள்ளது.

PREV
15
குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! மதுபானங்கள் விலை உயர்வு!  எவ்வளவு தெரியுமா?
குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! மதுபானங்கள் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுபான கடைகளும், பார்களும் போட்டி போட்டிக் கொண்டு தொடங்கப்படுகிறது. அதுவும் மதுபான விலை எவ்வளவு உயர்ந்தாலும் மதுபான கடைகளில் கூட்டம் குறைவதே இல்லை. ஆண்களுக்கு போட்டியாக பெண்களின் கைகளிலும் மதுபானம் அதிகளவில் குடிக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் டாஸ்மாக் வருமானத்தை நம்பி தான் அரசு இயந்திரமே இயங்கி வருகிறது. தினமும் 40 முதல் 60 கோடிக்கு விற்பனையாகும் மதுபானம், வார விடுமுறை என்றால் ரூ.100 கோடியை நெருங்கும். அதுவும்  தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் வருமானம் இரட்டிப்பாகும். 

25

மேலும் தமிழக அரசை பொறுத்தவரை மதுபானம் விலையானது அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. மறுபுறம் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகளையும், போராட்டங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. 

35

இந்நிலையில் ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் மதுபான விலைகள் கணிசமாக குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்தார். அதன்படி தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தும் சொன்ன படியே முதல்வர் சந்திரபாபு நாயுடு மதுபான விலைகளை அதிரடியாக குறைத்தார். அதாவது ரூ.120க்கு விற்கப்பட்ட மதுபாட்டில்களை ரூ.99ஆக குறைக்கப்பட்டது. குறிப்பாக எந்த பிராண்டாக இருந்தாலும் 180 மி.லி மதுவை 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

45

இந்நிலையில் குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றை ஆந்திரா அரசு வெளியிட்டுள்ளது. அதாவது ஆந்திராவில் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களை தவிர்த்து மற்ற மதுபானங்கள் விலையை கலால் துறை 15 சதவீதம் உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

55
Image Credit: Getty Images

அதேபோல் தெலுங்கானா மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பீர் வகைகள் மீது 15 சதவீத விலையை உயர்த்தி உள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பீரின் விலையை மாநில அரசு உயர்த்தி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories