Published : Feb 11, 2025, 10:07 AM ISTUpdated : Feb 11, 2025, 10:11 AM IST
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அரசியல் மாற்றங்கள் மற்றும் வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து, நடுத்தர மக்களை பாதிக்கிறது. வரும் மாதங்களில் தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் சவரனுக்கு 920 ரூபாய் அதிகரிப்பு.! இரண்டு நாளில் உச்சம் தொட்ட விலை
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரிக்கு வருகின்றது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 20 முதல் 25ஆயிரம் ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு சற்று குறைந்த தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
24
தங்கத்தில் முதலீடு
குறிப்பாக சர்வதேச அரசியல் மாற்றம், வர்த்தக போர் உருவாகும் சூழல் உள்ளிட்ட காரணத்தால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டது. இந்தியாவில் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகளவில் உள்ளது. இதன் காரணமாகவே நகைகளை மக்கள் வாங்கி குவிக்கிறார்கள். வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது புதிய, புதிய உச்சத்தை தொடும் என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
34
புதிய
அந்த வகையில் இன்னும் ஒரு சில மாதங்களில் ஒரு சவரன் 80ஆயிரத்தை தொடும் எனவும், இந்தாண்டு இறுத்திக்குள் ஒரு சவரன் ஒரு லட்சத்தை கடக்கும் என நகை வியாபாரிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் நேற்று தங்கம் கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் அதிகரித்து 7.980 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 63ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
44
64ஆயிரத்தை கடந்த தங்கம் விலை
இன்றும் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து 8060 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 64480க்கு ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்று 8 ஆயிரம் ரூபாயை தாண்டியிருப்பது நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.