Home Loan: வீட்டுக்கடனை முன் கூட்டியே கட்டுவதால் இவ்ளோ லாபமா?!

Published : Jun 24, 2025, 03:48 PM IST

வீட்டுக் கடனில் மாதத் தவணைக்கு மேல் கூடுதல் தொகை செலுத்துவதன் மூலம், வட்டிச் செலவைக் குறைத்து கடன் காலத்தையும் குறைக்கலாம். வருடத்திற்கு ஒரு லட்சம் கூடுதலாகக் கட்டினால், 15 வருட கடனை 7 அல்லது 8 வருடங்களில் முடிக்கலாம்.

PREV
19
கடனை முன்கூட்டியே கட்டுவது நல்லது

அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றுவது வாங்கிகள் வழங்கி வரும் வீட்டுக்கடன் என்ற திட்டமேயாகும்.இதில், மாதம்தோறும் நாம் செலுத்தும் தொகை "EMI" எனப்படுகிறது. இந்த EMI-யில் ஆரம்பத்தில் அதிகமாக வட்டி கட்டுகிறோம். கடன் தொகையை தவணையாக மட்டுமே கட்டிக்கொண்டால், பல ஆண்டுகள் செலவாகும். ஆனால், ஒவ்வொரு வருடத்திலும் கூடுதல் தொகையை கட்டினால், இந்த கடனை விரைவில் முடிக்கலாம்.

29
முன்கூட்டியே கட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்

வீட்டுக் கடனை வழக்கமான மாத தவணைகளாக 15 ஆண்டுகள் செலுத்தினால், கடன் தொகையைவிட கூடுதல் ₹10–₹15 லட்சம் வரை வட்டி கட்ட நேரிடும். ஆனால், வருடத்திற்கு ஒரு முறை ₹1 லட்சம் வரை கூடுதல் தொகையை செலுத்தினால், உங்கள் கடன் 15 ஆண்டுகளுக்கு பதிலாக 7 அல்லது 8 ஆண்டுகளில் முடிந்துவிடும். இதன் மூலம் மிகுந்த வட்டி செலவுகள் மிச்சமாகும்.

39
எவ்வளவு மிச்சமாகும்?

உதாரணமாக, ₹30 லட்சம் வீட்டு கடனை 15 ஆண்டுகளுக்கு 8% வட்டியில் வாங்கினால், மொத்தம் ₹51 லட்சம் கட்டவேண்டும். இதில் ₹21 லட்சம் வட்டி மட்டுமே. ஆனால், வருடத்திற்கு ₹1 லட்சம் கூடுதல் தொகை செலுத்தினால், கடன் காலம் பாதியாக குறையும். இதில் சுமார் ₹9 முதல் ₹11 லட்சம் வரை வட்டியில் மிச்சம் கிடைக்கும்.

49
வங்கிகளின் விதிமுறைகள்

ஒவ்வொரு வங்கிக்கும், முன்கூட்டியே கட்டும் விதிமுறைகள் வேறுபடும். பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலும் prepayment charges இல்லை. ஆனால் சில தனியார் வங்கிகள், குறிப்பாக fixed rate வட்டி இருந்தால், 2% வரை அபராதம் வசூலிக்கலாம். சில வங்கிகள் வருடத்திற்கு 1 முறை மட்டுமே கூடுதல் தொகை செலுத்த அனுமதிக்கின்றன. மற்ற சில வங்கிகள் எல்லா நேரத்திலும் கட்ட அனுமதிக்கின்றன.

59
எழுத்து மூல உறுதி ஏன் முக்கியம்?

வங்கியில் வாய்மொழியாக கூறப்படும் விஷயங்கள் அனைத்தும் ஒப்பந்தத்தில் இருப்பது அவசியம். நீங்கள் prepayment செய்ய விரும்பும் எண்ணம் இருந்தால், வங்கி கொடுக்கும் ஒப்பந்தத்தில் “Prepayment Charges இல்லை” என்றும், “எப்பொழுது வேண்டுமானாலும் கட்டலாம்” என்ற விவரங்களும் இருக்க வேண்டியது முக்கியம்.

69
எப்போது கட்டுவது சிறந்தது?

கடன் ஆரம்பித்த சில ஆண்டுகளில் கூடுதல் தொகையை கட்டுவது மிகவும் பயனளிக்கிறது. ஏனெனில், அந்த நேரத்தில் உங்கள் EMI-யில் பெரும்பகுதி வட்டியில் தான் இருக்கும். வருடாந்திர வருமான வரி ரிட்டர்ன், பானஸ், சேமிப்பு முதலியவற்றிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, ₹50,000 முதல் ₹2 லட்சம் வரை கட்டலாம்.

79
EMI குறையுமா, கடன் காலம் குறையுமா?

சில வங்கிகள் prepayment செய்த பின்பு EMI-யை குறைக்கும். ஆனால், EMI அதேபோல் இருந்து கடன் காலம் குறைய வேண்டும் என்றால், நீங்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். EMI குறையாமல் கடன் காலம் குறையும் என்ற திட்டம் தான் வட்டி மிச்சத்துக்கு ஏற்றது.

89
முக்கிய ஆலோசனைகள்

கடன் வாங்கும் முன்பே வங்கி, ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் விதிமுறைகளை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். எழுத்து மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வங்கி மாற்றம் செய்யும்போதும், prepayment விதிகள் என்ன என்பதை சரிபார்க்க வேண்டும்.

99
விரைவில் வீடு நம் வசமாகும்

வீட்டுக் கடனை முன்கூட்டியே கட்டுவது ஒரு புத்திசாலித்தனமான நிதி முடிவு. இது வட்டி செலவுகளை ₹10 லட்சம் வரை மிச்சமாக்கும். கடன் காலத்தை குறைத்து, உங்கள் சொத்தைப் பற்றிய முழு உரிமையை விரைவில் பெற உதவும். திட்டமிட்டு, வருடந்தோறும் கூடுதல் தொகை செலுத்துங்கள். உங்கள் வீட்டுக் கடனை விரைவில் முடிக்க வழி வகையுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories