மார்கன் ஸ்டான்லி 2026 ஜூன் மாதத்தில் சென்செக்ஸ் 1,00,000 புள்ளிகளை எட்டும் எனக் கணித்துள்ளது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சென்செக்ஸ் 30% அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்செக்ஸ் 1,00,000 புள்ளிகளை எப்போது தொடும் எனப் பிரபல மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்செக்ஸ் 1,00,000 புள்ளிகளைத் தொட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 30 சதவிகித வாய்ப்பிருப்பதாகவும் மார்கன் ஸ்டான்லி கூறுகிறது.
25
காத்திருந்தால் கை மேல் பலன்
இந்த இலக்கை அடைய வேண்டுமெனில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 65 டாலருக்குக் கீழே இருக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்க வேண்டும் என்றும் மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. இதுதவிர, ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு போன்ற சில நடவடிக்கைகளும், விவசாயத் துறையில் சீர்திருத்தங்களும் செய்யப்பட வேண்டும். எனவும் அப்படி நடந்தால், காளைச் சந்தை தொடங்கி 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்செக்ஸ் 1,00,000 புள்ளிகளைத் தொடுவதற்கு 30 சதவிகித வாய்ப்புள்ளதாகவும் மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. காத்திருந்து சரியாக முதலீடு செய்தால் லாபத்தை அள்ளிச்செல்லலாம் எனவும் மார்கன் ஸ்டான்லி குறிப்பிட்டுள்ளது.
35
சென்செக்ஸ் சரிவடைய வாய்ப்புள்ளதா?
பங்குச் சந்தை வர்த்தகத்தில் எப்போதும் எதிர்பாராததை எதிர்பார்க்க வேண்டும் எனவும் தப்பித்தவறி கரடிச் சந்தை ஏற்பட்டால், 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்செக்ஸ் 70,000 புள்ளிகளுக்கு இறங்கிவிடும் எனவும் இதற்கு 20 சதவிகித வாய்ப்பிருப்பதாகவும் மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
ஒரு வேளை கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் உயர்ந்து, அதன் விளைவாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் கடுமையாக்கினால் சென்செக்ஸ் இறங்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூடுதலாக, அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு, நிறுவனங்களின் வருமான வளர்ச்சி குறைந்தால், கரடிச் சந்தை ஏற்பட்டு சென்செக்ஸ் 70,000 புள்ளிகளுக்கு இறங்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் மார்கன் ஸ்டான்லி கூறியுள்ளது.
55
இதில் முதலீடு செய்யுங்கள் - லாபத்தை அள்ளுங்கள்
நிதி நிறுவன பங்குகள், அன்றாட பயன்பாட்டு பொருட்கள் மற்றும் தொழில் துறை பங்குகள் லாபத்தை அள்ளிக்கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள மார்கன் ஸ்டான்லி, மருத்துவம், எரிசக்தி, மின் உற்த்தித்துறை பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு சாதகமான பலனை தரும் எனவும் குறிப்பிட்டுள்ளது. சந்தை ஏற்றமோ இறக்கமோ கண்காணித்து காத்திருந்து முதலீடு செய்வதே சரியாக இருக்கும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.