இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா?

First Published | Nov 30, 2024, 10:13 AM IST

வரி செலுத்துவதில் நாட்டிலேயே முதல் ஐந்து இடங்களில் இருப்பவர்கள் யார் தெரியுமா? இந்த லிஸ்டில் பாலிவுட் நடிகர்கள்தான் அதிகமாக உள்ளனர். விதிவிலக்காக இருப்பவர் தளபதி விஜய் ஒருவர்தான்.

Top Taxpayers

வருமான வரி:

வரி செலுத்துவதில் நாட்டிலேயே முதல் ஐந்து இடங்களில் இருப்பவர்கள் யார் தெரியுமா? இந்த லிஸ்டில் பாலிவுட் நடிகர்கள்தான் அதிகமாக உள்ளனர். விதிவிலக்காக இருப்பவர் தளபதி விஜய் ஒருவர்தான்.

Virat Kohli and Anushka Sharma

விராட் கோலி (ரூ. 66 கோடி):

அதிக வரி செலுத்தும் தனிநபர்கள் பட்டியலில் டாப் 5 இடத்தில் நான்கு பேர் சினிமா ஸ்டார்கள். மூன்று பாலிவுட் நடிகர்களும் ஒரு தமிழ் நடிகரும் உள்ளனர். ஐந்தாவது இடத்தைப் பிடித்திருப்பவர் விராட் கோலி. இந்தியக் கிரிக்கெட் அணியின நட்சத்திர வீரரும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் கணவருமான கோலி, 66 கோடி ரூபாய் வரியாகச் செலுத்தி இந்தப் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்

Tap to resize

Amitabh Bachchan

அமிதாப் பச்சன் (ரூ. 71 கோடி):

நடிப்பின் சக்கரவர்த்தியாகக் கருதப்படும் அமிதாப் பச்சன், கடந்த 24 ஆண்டுகளாக 'கவுன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். அமிதாப், ரூ.71 கோடியை வரியாக செலுத்தி, அதிக வரி செலுத்துவோர் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

Salman Khan

சல்மான் கான் (ரூ. 75 கோடி):

பாலிவுட் ஹீரோ சல்மான் கான் வரி செலுத்துவதில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் மீண்டும் 'பிக் பாஸ்' தொகுப்பாளராகி மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளார். 2023-24 நிதியாண்டில், சல்மான் கான் மொத்தம் ரூ.75 கோடியை வரியாகச் செலுத்தி வரி செலுத்துவோர் பட்டியலில் டாப் 3 லிஸ்டில் இடத்தைப் பிடித்துள்ளார்.

TVK Thalapathy Vijay

தளபதி விஜய் (ரூ. 80 கோடி):

சம்பாதிப்பதிலும் வரி செலுத்துவதிலும் நாட்டிலேயே இரண்டாவதாக இருப்பவர் தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர் விஜய். சமீபத்தில் அரசியல் கட்சியை உருவாக்கியுள்ள விஜய் தற்போது நடத்திவரும் படத்துடன் சினிமாவில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். விஜய் 2023-24 நிதி ஆண்டில் சுமார் 80 கோடி ரூபாய் வரி செலுத்தி இருக்கிறார்.

Sharukh Khan

ஷாருக் கான் (ரூ. 92 கோடி):

கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக் கான் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருப்பதுடன், வரி செலுத்துவதிலும் முதலிடத்தில் உள்ளார். 2023-24 நிதியாண்டில் ஷாருக்கான் மொத்தமாக ரூ.92 கோடி வரி செலுத்தி இருக்கிறார். கடந்த ஆண்டு ஷாருக்கின் 'பதான்', 'ஜவான்' மற்றும் 'டுங்கி' ஆகிய மூன்று படங்களும் வெளிவந்தன. அதில் 'பதான்' மற்றும் 'ஜவான்' பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை படைத்தன.

Latest Videos

click me!