வீட்டில் இருந்தே மாதம் ரூ.20,000 சம்பாதிக்கலாம்! போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் இணைவது எப்படி?

First Published | Sep 17, 2024, 11:22 AM IST

Senior Citizen Savings Scheme: எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாதம் ரூ.20,000 சம்பாதிக்கும் திட்டத்தை தபால் நிலையம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் செய்யும் முதலீடுக்கு வேறு எங்கும் கிடைக்காத அளவு வட்டியும் அளிக்கப்படுகிறுத.

பணி ஓய்வுக்குப் பின் நிலையான வருமானம் கிடைக்கவும், முதுமையில் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்கவும் முன்கூட்டியே திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். அஞ்சல் அலுவலகம் வழங்கும் சேமிப்புத் திட்டங்கள் இதற்குத் தீர்வாக இருக்கும். குறிப்பாக மூத்த குடிமக்களுக்காகவே உள்ள தபால நிலைய மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (போஸ்ட் ஆபிஸ் எஸ்சிஎஸ்எஸ் திட்டம்) வேலைக்குச் செல்லாமலே உத்தரவாதமான வருமானத்தைக் கொடுக்கிறது.

இந்தத் திட்டத்தில் செய்யும் முதலீட்டுக்கு 8 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி வழங்கப்படுகிறது. பிக்ஸட் டெபாசிட் திட்டங்களை விட அதிக வட்டி கொடுக்கப்படுகிறது. ஜனவரி 1, 2024 முதல் இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை 8.2 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் முதுமையில் வீட்டில் இருந்தபடியே மாதம் ரூ.20,000 வரை சம்பாதிக்கலாம்.

Tap to resize

post office scheme

இத்திட்டத்தில் கணக்கு தொடங்கி குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.30 லட்சம் ஆகும். இந்தத் திட்டம் ஓய்வுக்குப் பிறகு உறுதியான வருமானம் மிகவும் உதவியாக இருக்கும். 60 வயதை எட்டியவர்கள் தனியாகவோ கணவர் / மனைவியுடன் சேர்ந்து கூட்டாகவோ கணக்கு தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ், விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு இத்திட்டத்தில் சேர வயது வரம்பு தளர்வும் உண்டு.

அருகிலுள்ள எந்த தபால் நிலையத்திலும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் முன்கூட்டியே கணக்கை முடித்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கு தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தத் திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கும் கிடைக்கும். வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். கணக்கு வைத்திருப்பவர் முதிர்வு காலத்திற்கு முன்பே இறந்துவிட்டால், கணக்கு மூடப்பட்டு மொத்த பணமும் நாமினியிடம் ஒப்படைக்கப்படும்.

Post Office Senior Citizen Savings Scheme Investment

இத்திட்டத்தில் அதிகபட்ச முதலீடான ரூ.30 லட்சத்தை டெபாசிட் செய்தால், 8.2 சதவீதம் வட்டி விகிதத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம் வட்டி கிடைக்கும். அதாவது வீட்டில் இருந்தபடியே மாதம்தோறும் ரூ.20,000 க்கு மேல் வருமானம் பெறலாம்.

Latest Videos

click me!