மனைவியுடன் சேர்ந்து முதலீடு செய்தால் ரூ.1.11 லட்சம் வருமானத்துக்கு கேரண்டி! முழு விவரம் இதோ!!

First Published | Sep 17, 2024, 9:08 AM IST

முதலீடு செய்யும் எண்ணத்துடன் நல்ல திட்டம் எது என்று யோசிப்பவர்களுக்கு சூப்பரான வழி ஒன்று உள்ளது. மனைவியுடன் சேர்ந்து முதலீடு செய்வது நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வழிகளில் ஒன்று. போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் மனைவியுடன் சேர்ந்து முதலீடு செய்வது எப்படி என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Post Office Investment

கணவன்-மனைவி கூட்டுக் கணக்கு தொடங்க போஸ்ட் ஆபிஸ் ஒரு சூப்பரான திட்டத்தை வழங்குகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் உத்தரவாதமான வருமானத்தைப் பெறலாம். இதில், மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். தபால் நிலையத்தின் சிறு சேமிப்பு திட்டத்தில் பணத்தைப் போடுவதால், முதலீடு முற்றிலும் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

Post Office Savings Account

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) திட்டத்தில் சேர்ந்து ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதும். இத்திட்டத்தில் கூட்டுக் கணக்கு தொடங்கும் வசதி உள்ளது. இந்தத் திட்டத்தில் 3 நபர்கள் வரை இணைந்து கணக்குகளைத் திறக்கலாம். ஆனால் இந்தக் கணக்கில் ஒருமுறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

Tap to resize

Post Office Joint Account

மாத வருமானத் திட்டத்தில் ஒரு கணக்கில் அதிகபட்சம் 9 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய முடியும். அதேசமயம், கூட்டுக் கணக்கில் டெபாசிட் வரம்பு 15 லட்சம் ரூபாய். 5 ஆண்டுகளுக்குப் பிறகு தொகையைத் திரும்பப் பெறலாம். அல்லது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் பிறகும் பணத்தை எடுத்துக்கொள்ளவோ நீட்டிக்கவோ முடியும். இந்தக் கணக்கிலிருந்து கிடைக்கும் வட்டி ஒவ்வொரு மாதமும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Post Office Schemes

கணவனும் மனைவியும் ஒரு கூட்டுக் கணக்கைத் திறந்து, அதிகபட்சமாக ரூ.15 லட்சம் டெபாசிட் செய்கின்றனர் என்று வைத்துக்கொண்டால், 7.4 சதவீதம் வட்டியுடன் ஆண்டுக்கு ரூ.1,11,000 வரும். அதாவது, ஒவ்வொரு மாதமும் ரூ.9250 கிடைக்கும்.

Monthly Income Scheme in Post Office

இந்தத் திட்டத்தில் இரண்டு அல்லது மூன்று பேர் கூட்டுக் கணக்கைத் தொடங்கினால், கிடைக்கும் வருமானம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது. கூட்டுக் கணக்கை எந்த நேரத்திலும் ஒரே கணக்காக மாற்றலாம். தனிநபர் கணக்கை கூட்டுக் கணக்காகவும் மாற்றலாம். மாற்றம் செய்ய, கணக்கில் உறுப்பினராகும் அனைவரின் கூட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

Post Office MIS investment:

மாத வருமானத் திட்டத்தை முன்கூட்டியே மூடுவதற்கான ஆப்ஷனும் உள்ளது. ஆனால், டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குப் பிறகுதான் பணத்தை எடுக்க முடியும். விதிகளின்படி, 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்குள் பணத்தை எடுத்தால், டெபாசிட் தொகையில் 2% கட்டணம் பெறப்படும். கணக்கைத் தொடங்கி 3 ஆண்டுகளுக்குப் பிறகு எப்போது பணத்தை எடுத்தாலும், டெபாசிட் தொகையில் 1% கட்டணமாக வசூலிக்கப்படும்.

Post Office Monthly Income Scheme

இந்தியக் குடிமக்கள் அனைவரும் போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். குழந்தையின் பெயரிலும் கணக்கு தொடங்கலாம். குழந்தைக்கு 10 வயதுக்குக் குறைவாக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலரால் மூலம் குழந்தையின் பெயரில் கணக்கைத் திறக்கலாம். குழந்தைக்கு 10 வயதாகும்போது, ​​கணக்கை நிர்வகிக்கும் உரிமையையும் குழந்தைக்குக் கிடைக்கும். இத்திட்டத்தில் சேர போஸ்ட் ஆபிசில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அடையாளச் சான்றுக்கு ஆதார் அட்டை, பான் கார்டு நகலைக் கொடுக்க வேண்டும்.

Latest Videos

click me!