தங்கத்தை விற்கப் போறீங்களா? வருமான வரி விதிகளை முதலில் தெரிஞ்சுக்கோங்க!

Published : Nov 30, 2024, 02:14 PM IST

தங்க ETF, டிஜிட்டல் தங்கம், நகைகள், தங்கப் பத்திரங்கள் என வெவ்வேறு வடிவங்களில் தங்கத்தை வைத்திருப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் உரிய வருமான வரி விதிக்கப்படும். நீண்ட கால மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரிகள், வரி விலக்குகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வரி விதிப்புகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

PREV
18
தங்கத்தை விற்கப் போறீங்களா? வருமான வரி விதிகளை முதலில் தெரிஞ்சுக்கோங்க!
Gold Selling Tax

தங்கத்தின் விலைகள் உயர்ந்துகொண்டே இருப்பதால், பல முதலீட்டாளர்கள் தங்கம் ETF, டிஜிட்டல் தங்கம், தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். சிலர் தங்கத்தை விற்கவும் விரும்புகிறார்கள். அவர்கள் தங்கத்தை வெவ்வேறு வடிவங்களில் வைத்திருப்பதற்கும் விற்பனை செய்வதகும் உரிய வருமான வரி பற்றிப் புரிந்துகொள்வது அவசியம்.

28
Gold ETFs

தங்க ETF:

தங்க ETF களில் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் (LTCG) 12.5% வரி விதிப்புக்கு உட்பட்டவை. ஒரு நிதியாண்டில் வரி விலக்கு வரம்பு ரூ.1.25 லட்சம் வரை இருக்கும். ஈக்விட்டி பங்குகளைப் போலன்றி (ஒரு வருடம்), தங்கப் ETF களில் LTCG காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இதில் குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கு (STCG) முதலீட்டாளரின் வருமான வரி அடுக்கின் விகிதத்தில் வரி விதிக்கப்படும்.

38
Physical gold

நகைகள், நாணயங்கள்:

தங்க ஆபரணங்கள், தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளை போன்ற தங்கப் பொருள்கள் தான் இந்தியாவில் மிகவும் பரவலாகக் கையாளப்படும் தங்கத்தின் வடிவமாக உள்ளது . 24 மாதங்களுக்கும் மேலாக தங்கத்தால் கிடைக்கும் ஆதாயங்கள் LTCG என வகைப்படுத்தப்பட்டு 12.5% ​​வரி விதிக்கப்படும். 24 மாதங்களுக்கும் குறைவான ஆதாயங்கள் STCG வகையில், முதலீட்டாளரின் வருமான வரி அடுக்கின்படி வரி விதிப்புக்கு உட்படும்.

48
Digital gold

டிஜிட்டல் தங்கம்:

சமீப காலமாக டிஜிட்டல் தங்கம் (Digital Gold) தங்கத்தில் முதலீடு செய்ய வசதியானக மற்றும் பாதுகாப்பான வழியாக உருவெடுத்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை ஆன்லைனில் வாங்க முடிகிறது. ஆனால், டிஜிட்டல் தங்கத்திற்கான வரி தங்க ஆபரணங்களைப் போலவே உள்ளது. 24 மாதங்களுக்கும் மேலாக வைத்திருக்கும் டிஜிட்டல் தங்கத்தின் ஆதாயங்களுக்கு 12.5% ​​வரி விதிக்கப்படும், குறுகிய காலத்திற்கு முதலீட்டாளரின் வருமான அடுக்கு அடிப்படையில் STCG வரி விதிக்கப்படுகிறது.

58
Sovereign gold bonds

தங்கப் பத்திரங்கள்:

தங்கப் பத்திரங்கள் தனித்துவமான பலனைத் தருபவை. முதிர்வுக்குப் பிறகு பெறப்படும் மூலதன ஆதாயங்கள் மீது வரி விலக்கு உண்டு. ஆனால், முதலீட்டுக் காலத்தில் ஆண்டுக்கு 2.5% வட்டிக்கு, முதலீட்டாளரின் வருமான வரி அடுக்கு விகிதங்களின்படி வரி விதிக்கப்படுகிறது.

68

ಇನ್ನು ಇತ್ತ  24 ಕ್ಯಾರೆಟ್ ಚಿನ್ನದ ದರದಲ್ಲಿ ಯಾವುದೇ ಬದಲಾವಣೆಯಾಗಿಲ್ಲ.10 ಗ್ರಾಂ ಚಿನ್ನದ ದರದಲ್ಲೂ 53,020 ರೂಪಾಯಿ ಆಗಿದೆ.

 

தங்க டெரிவேட்டிவ்:

கமாடிட்டி சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் தங்க டெரிவேட்டிவ், மூலதன ஆதாயத்தின் அடிப்படையில் வரி விதிப்புக்கு உட்படுவதில்லை. இது ஊக வணிகம் அல்லாத வருமானமாகக் கருதப்பட்டு, முதலீட்டாளரின் நிகர லாபத்துக்கு பொருத்தமான வருமான வரி அடுக்கின்படி வரி விதிக்கப்படுகிறது.

78

এমনকী সোনার কয়েন বা সোনার বার কিনতেও ব্যবহার করা যাবে এই গোল্ড বা ডায়মন্ড ভাউচার।

வெளிநாடு வாழ் இந்தியர்கள்:

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) தங்கப் பத்திரங்களைத் தவிர, நகைகள், நாணயங்கள், கட்டிகள், டிஜிட்டல் கோல்டு என மற்ற வடிவிலான தங்கத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். NRIகளுக்கான வரி விகிதங்கள் இந்தியாவில் வசிப்பவர்களுக்குச் சமமானதுதான். ஆனால், தங்க ETF களுக்கு TDS பிடித்தம் உண்டு.

88


 ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৬,৮৫০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,১৪০ টাকা।

பரிசுப் பொருளுக்கு வரி விலக்கு:

நெருங்கிய உறவினரிடமிருந்து அன்பளிப்பாகப் பெறப்படும் தங்கம் மற்றும் திருமணத்தின்போது பரிசாகக் கிடைக்கும் தங்கம் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், அதை பின்னர் விற்பனை செய்தால், முந்தைய உரிமையாளர் அதை வைத்திருந்த காலம் மற்றும் விலையின் அடிப்படையில் மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.

தங்கம் நிலையான முதலீட்டு வாய்ப்பாக இருந்தாலும், அதன் மீதான வரிவிதிப்பு விதிமுறைகளை கவனமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். தங்கத்தின் மூலம் அதிகபட்ச பலனைப் பெற வரி விதிப்பின் தாக்கங்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories