SBI Mutual Funds Investment
மியூச்சுவல் ஃபண்ட் துறையின் சொத்து அளவு மாதந்தோறும் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கத்தின் (AMFI) சமீபத்திய அறிக்கை உறுதிசெய்கிறது. மியூச்சுவல் ஃபண்டுகளில் பெரும்பாலான புதிய முதலீடுகள் ஈக்விட்டி திட்டங்களில் வருகின்றன.
தனிப்பட்ட முதலீட்டாளர்களில் 87% பேர் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பங்கு சார்ந்த திட்டங்களின் விகிதாசார பங்கு செப்டம்பர் 2023 இல் 54.1% ஆக இருந்தது. இது 2024 செப்டம்பரில் 61% ஆக உள்ளது. கடந்த 10 வருட வருமானத்தின் அடிப்படையில் ஈக்விட்டி பிரிவில் டாப் 5 எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டுகளை இத்தொகுப்பில் காணலாம்.
SBI Small Cap Fund
இந்த ஃபண்டில் NAV - ரூ 203.88. 30-செப். 2024 வரை நிதி அளவு ரூ. 34,217 கோடி. செலவு விகிதம் 0.66%. 10 ஆண்டு வருமானம் 23.50%. 10 ஆண்டு SIP வருமானம் - 23.68%.
இந்த வருடாந்திர வருமான விகிதத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ.10,000 முதலீடு செய்யத் தொடங்கி இருந்தால் இப்போது ரூ.42.85 லட்சமாக மாறியிருக்கும்.
SBI Consumption Opportunities Fund
இந்த ஃபண்டில் NAV ரூ.370.57. நிதி அளவு ரூ 3,101 கோடி. செலவு விகிதம் 0.9%. 10 ஆண்டு வருமானம் 18.13%. 10 ஆண்டு SIP வருமானம் 20.64%.
இந்த விகிதத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ. 10,000 முதலீடு செய்யத் தொடங்கி இருந்தால் இப்போது ரூ.36.29 லட்சமாக மாறியிருக்கும்.
SBI Magnum Midcap Fund
இந்த ஃபண்டில் NAV ரூ 261.64. நிதி அளவு ரூ 22,338 கோடி. செலவு விகிதம் : 0.77%. 10 ஆண்டு வருமானம் 18.01%. 10 ஆண்டு SIP வருமானம் 20.2%.
இந்த வளர்ச்சி விகிதத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.10,000 மாதாந்திர SIP முதலீட்டைத் தொடங்கியிருந்தால் இப்போது ரூ.35.42 லட்சமாக மாறியிருக்கும்.
SBI Technology Opportunities Fund
இந்த ஃபண்டில் NAV ரூ 236.23. நிதி அளவு ரூ 4,435 கோடி. செலவு விகிதம் 0.84%. 10 ஆண்டு வருமானம் 17.75%. 10 ஆண்டு SIP வருமானம் 21.83%.
இந்த விகிதத்தில், 5 ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ.10,000 முதலீடு செய்ய ஆரம்பித்திருந்தால் இப்போது ரூ.38.73 லட்சமாக மாறியிருக்கும்.
SBI Infrastructure Fund
இந்த ஃபண்டில் NAV ரூ 54.84. நிதி அளவு ரூ.5071 கோடி. செலவு விகிதம் 0.95%. 10 ஆண்டு வருமானம் 17.70%. 10 ஆண்டு SIP வருமானம் 21.77%.
இந்த வருடாந்திர வருமான விகிதத்துடன், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ.10,000 இல் தொடங்கப்பட்ட எஸ்ஐபி முதலீடு இப்போது ரூ.38.61 லட்சமாக மாறியிருக்கும்.