ஸ்டேட் வங்கி மற்றும் போஸ்ட் ஆபீசில் நிரந்தர வைப்புநிதித் திட்டத்துக்கான வட்டி விகிதம், வரிச் சலுகைகள், முதிர்வு காலம், முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் காலம் ஏழு நாட்கள் முதல் பத்து ஆண்டுகள் வரை நீடிக்கும். தபால் துறை திட்டத்தில் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே பிக்சட் டெபாசிட் செய்யலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.2 கோடிக்குள் டெபாசிட் செய்தால் 3 முதல் 7 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5 சதவீதம் வட்டி கொடுக்கப்படும். வங்கியின் தனித்துவமான அம்ரித் கலாஷ் திட்டம் மூலம் முதியோருக்கு 7.6 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படுகிறது.
அஞ்சல்துறையில் வட்டி விகிதம் 6.8 முதல் 7.5 சதவீதம் வரை இருக்கும். ஒவ்வொரு ஆண்டும், வட்டி கூட்டப்பட்டு வருகிறது.
Post Office Scheme
வருமான வரிச் சட்டத்தின்படி எஸ்பிஐ மற்றும் தபால் நிலையம் இரண்டிலும் நிரந்தர வைப்புநிதி திட்டத்திற்கு வரிச் சலுகைகளைப் பெற முடியும்.
தபால் நிலையத்தில் டெபாசிட் செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்கு முன் நிரந்தர வைப்புநிதியைத் திரும்பப் பெற முடியாது. ஆறு மாதங்களுக்குப் பிறகு சேமிப்புக் கணக்கு வட்டியுடன் திரும்பப் பெறலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணத்தை எடுக்க விரும்பினால் அபராதம் செலுத்த வேண்டும்.