Gold Rate Today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

First Published Apr 24, 2023, 9:52 AM IST

அக்‌ஷய திருதியை முன்னிட்டு உயர்ந்த தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காண்போம்.

தங்கம் வாங்குவதற்கு உகந்த நாளாக அட்சய திருதியை திருநாள் விளங்கி வருகிறது. இந்நாளில் ஏராளமான மக்கள் நகைக்கடைகளுக்குச் சென்று கூட்டம் கூட்டமாகும் தங்கம் வாங்கிச் செல்வார்கள்.

அக்‌ஷய திருதியை ஒட்டி நகைக்கடைகளில் இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக 45 ஆயிரத்தை தாண்டி விற்கப்பட்டது.

தங்கத்தின் விலை நேற்று, கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ. 5,605 க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ.44,840 க்கும் விற்பனையானது.  வெள்ளி கிராம் ஒன்றுக்கு 90 காசுகள் குறைந்து ரூ.80.40க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோ வெள்ளி ரூ80,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய (ஏப்ரல் 24) நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு 10 உயர்ந்து 5,515க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 80 உயர்ந்து 44,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையானது இன்று கிராம் 80க்கும், ஒரு கிலோ வெள்ளி 80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் காலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயரும் என்று கணிக்கப்படுகிறது.

இதையும் படிங்க..அட்சய திரிதியை அப்போ இதையெல்லாம் தானமா கொடுங்க.! லட்சுமி கடாட்சம் வரும்! செல்வம் கொட்டும்!!

click me!